மெரினாவில் நினைவிடம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த வழக்கு வாபஸ்.!

20shares

உலகின் 2வது மிக நீண்ட கடற்கரையான மெரினாவில் உயிரிழந்தவர்களுக்கான நினைவிடங்களை அமைக்க கூடாதென வழக்கு தொடர்ந்திருந்த வழக்கறிஞர் காந்திமதி என்பவர் தமது வழக்கினை வாபஸ் பெற்ற காரணத்தினால் மேற்கண்ட வழக்கினை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.

பேரறிஞர் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரது நினைவிடங்கள் மெரினாவில் அமைக்கப்பட்டுள்ள நிலையில், இனியும் அங்கு எந்த நினைவிடத்தையும் அமைக்க கூடாதென டிராபிக் ராமசாமி, வழக்கறிஞர் எஸ்.துரைசாமி உள்ளிட்ட பலரும் எதிர்ப்பு தெரிவித்து தனித்தனியாக வழக்குத் தொடந்தனர்.

அதே சமயம், வழக்கறிஞர் காந்திமதி என்பவர் மெரினாவில் நினைவிடம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் வழக்குத் தொடர்ந்திருந்தார். இன்று மனு நீதிபதி சுந்தர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது அந்த மனுவை திரும்பப் பெற்றார். இதையடுத்து அந்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

முன்னதாக, சொத்துகுவிப்பு வழக்கில் தண்டனைபெற்ற முன்னாள் முதல்வர் ஜெயாவுக்கு மெரினாவில் நினைவிடம் அமைப்பது தவறான முன்னுதாரமனாக அமைந்துவிடுமென சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துவந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க