ராஜிவ் காந்தி கொலைக் குற்றவாளிகள் தொடர்பான முடிவை அறிவித்த மத்திய அரசு!

86shares
Image

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி 1991ஆம் ஆண்டு மே 21ஆம் திகதி குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டார். இக் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகியோர் 27 ஆண்டுகளாக சிறையில் உள்ளனர்.

இவ் விசாரணை பயங்கரவாத மற்றும் சீர்கேட்டு நடவடிக்கைகள் சட்டம் (தடா) கீழ் நடத்தப்பட்டது. சென்னையில் நியமிக்கப்பட்ட தடா நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு மரண தண்டனை அளித்தது. இது இந்தியாவில் ஒரு புயலை உருவாக்கியது. சட்ட வல்லுனர்கள் திகைத்தனர்.

மனித உரிமைகள் குழுக்கள் இவ்விசாரணை நியாயமான விசாரணையின் தரத்தை பூர்த்தி செய்யவில்லை என கண்டனம் தெரிவித்தன. ராஜீவ் காந்தி வழக்கில் ஒப்புதல் வாக்கு மூலம் வழங்கியமை அவர்களுக்கு எதிரான தீர்ப்புக்கு ஒரு முக்கிய அங்கமாக இருந்தது. ஆனால் பின்னர் அவை வற்புறுத்தலின் பேரில் எடுக்கப்பட்டவை என்று அவர்கள் குற்றம் சாட்டினர்.

உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்த பின் நான்கு பேருக்கு மட்டும் மரணதண்டனை விதிக்கப்பட்டது.

முருகன், பேரறிவாளன், சாந்தன், நளினி ஆகிய நான்கு பேருக்கு உச்ச நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது. இதில் சோனியா காந்தியின் பரிந்துரையின் பேரில் நளினியின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. ஆனால் மற்ற மூவரின் கருணை மனுக்கள் ஓகஸ்ட் 2011 அன்று குடியரசுத் தலைவரால் மறுக்கப்பட்டன. இவ்வாறு கருணை மனுக்கள் மறுக்கப்பட்ட நிலையில் இவர்களது தூக்குதண்டனையை நிறைவேற்ற செப்டம்பர் 9, 2011 நாள் குறிக்கப்பட்டது.

இந்தண்டனையை விலக்கக்கோரி சில அரசியல் மற்றும் திராவிட இயக்கங்கள் போராட்டம் நடத்தி வந்தன. ஆகஸ்ட் 30 ,2011 இல் சென்னை உயர்நீதிமன்றம் இம்மூவரின் தூக்கு தண்டனையை எட்டு வாரங்களுக்கு தடை விதித்தது. இம்மூவரின் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்க வேண்டுமென்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ராஜீவ் கொலை குற்றவாளிகளின் தூக்குதண்டனையை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ப. சதாசிவம், ரஞ்சன் கோகாய், சி.கே.சிங் ஆகியோர் கொண்ட அமர்வு பெப்ரவரி 18ஆம் திகதி ரத்து செய்து உத்தரவிட்டது. மேலும், சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி உள்பட ஏழு பேரையும் விடுதலை செய்யலாம் என்று தமிழ்நாடு அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவு மத்திய அரசுக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்படும் என்றும், மத்திய அரசு 3 நாட்களுக்குள் பதில் அளிக்காவிட்டால், அவர்களை தமிழக அரசே விடுதலை செய்யும் என்றும் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் இன்று வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

அவர்களை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்தது. இதனை எதிர்த்து மத்திய அரசு, சுப்ரீம் கோர்ட்டில் முறையீடுசெய்தது. இந்த வழக்கில், மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், ராஜிவ் கொலையாளிகளை விடுதலை செய்ய வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு விட்டது.

முன்னாள் பிரதமர் கொல்லப்பட்டதால், அவர்களை விடுதலை செய்ய முடியாது. இந்த முடிவு தமிழக அரசுக்கும் தெரிவிக்கபட்டு விட்டதாக கூறப்பட்டுள்ளது.

இதையும் தவறாமல் படிங்க