குரூப் 2 தேர்வு - அறிவிப்பு வெளியிட்டது டிஎன்பிஎஸ்இ.!

5shares

குரூப் - 2 தேர்வு காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழக அரசு பணிகளுக்கான தேர்வை டி.என்.பி.எஸ்.சி எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தி வருகிறது. இதில், குரூப் 2 பிரிவில் நேர்முகத் தேர்வு உடன் மற்றும் நேர்முகத் தேர்வு அல்லாத பிரிவு என தனித்தனியே தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் தற்போது காலியாகவுள்ள 1,199 காலிப் பணியிடங்களுக்கான குரூப் 2 தேர்வு, வரும் நவம்பர் 11ஆம் தேதி நடைபெறும் என்று டி.என்.பி.எஸ்.சி தெரிவித்துள்ளது. அதற்கான அறிவிப்பினையும் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது.

குரூப் 2 தேர்வுக்கு இன்று முதல் செப்டம்பர் 9 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்தப் பிரிவில் உதவி வணிக வரி அலுவலர், சார் பதிவாளர், துணை வட்டாட்சியர் உள்ளிட்ட பதவிகள் இடம்பெற்றுள்ளன.

இதையும் தவறாமல் படிங்க