மெரினாவுக்கு காட்டிய முக்கியத்துவத்தை ஸ்டெர்லைட் விவகாரத்தில் காட்டியிருக்கலாமே.!

38shares

கடந்த 7 ஆம் தேதி உடல்நலக்குறைவின் காரணமாக காலமான திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கலைஞர் மு.கருணாநிதியின் உடலை சென்னை, மெரினா கடற்கரையில் அடக்கம் செய்ய இடமளிக்க வேண்டும் என்பது அக்கட்சியினரின் சார்பில், பொதுமக்களின் சார்பிலும் வைக்கப்பட்ட முக்கியமானதோர் கோரிக்கை.

ஆனால், சட்ட சிக்கல்கள் உள்ளதாக கூறி கலைஞரின் உடலை மெரினாவில் அடக்கம் செய்ய அனுமதி மறுத்தது அரசு. அதனைத்தொடர்ந்து இரவோடு இரவாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு அங்கு அனுமதி பெறப்பட்டு 8 ஆம் தேதி மெரினாவில் அண்ணா நினைவிடத்தில் கலைஞரின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

அதே சமயம், 8 ஆம் தேதி காலை 10 மணியளவில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான வழக்கு நடைபெற்றது. அப்போது, ஸ்டெர்லைட் தொழிற்சாலையில் நிர்வாக ரீதியிலான செயல்பாடுகளை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது.

மேற்கண்ட ஸ்டெர்லைட் விவகாரத்தினை சுட்டிக்காட்டி அரசை விமர்சித்துள்ளார் திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி.

மெரினாவில் கலைஞர் உடலை அடக்கம் செய்ய அனுமதி மறுத்த அரசு, இந்த விவகாரத்தில் காட்டிய அக்கறையை ஸ்டெர்லைட் விவகாரத்தில் காட்டியிருக்குமேயானால் இந்த பின்னடைவு ஏற்பட்டிருக்காது என விமர்சித்துள்ளார் கனிமொழி.

இதையும் தவறாமல் படிங்க
ஜெயலலிதாவுக்காக எரித்து கொல்லப்பட்ட 3 மாணவிகள் - ஓர் நினைவுப்பகிர்தல்.!

ஜெயலலிதாவுக்காக எரித்து கொல்லப்பட்ட 3 மாணவிகள் - ஓர் நினைவுப்பகிர்தல்.!

விடிந்தால் கல்யாணம்; மணமக்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

விடிந்தால் கல்யாணம்; மணமக்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

இலங்கையில் திருமண பந்தத்தில் இணைந்த தம்பதிகளுக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி!

இலங்கையில் திருமண பந்தத்தில் இணைந்த தம்பதிகளுக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி!