திருமுருகன் காந்தியை சிறையிலடைக்க முடியாது - நீதிமன்றம் அதிரடி.!

49shares

தூத்துக்குடி ஸ்டெர்லைட் தொழிற்சாலையை மூடக்கோரி கடந்த மே மாத இறுதியில் நடைபெற்ற மக்கள்திரள் ஆர்ப்பாட்டத்தின் போது அரசின் துப்பாக்கிச்சூட்டால் உயிரிழந்த 13 பொதுமக்களின் உயிருக்கு நீதி கேட்டும், அரசின் கார்ப்பரேட் ஆதரவு போக்கினையும் சுட்டிக்காட்டி கடந்த ஜூன் மாதம் சமூக வலைத்தளங்களில் திருமுருகன் காந்தி காணொளி வெளியிட்டதாக கூறப்படுகிறது.

அதனைக் காரணம் காட்டி ஐ.நா வில் தூத்துக்குடி துப்பாக்கி சூடு குறித்து பேசி விட்டு நேற்று பெங்களூரு வந்த திருமுருகன் காந்தியை கைது செய்தது குடிவரவுத்துறை.

தொடர்ந்து, இன்று காலை சென்னைக்கு கொண்டுவரப்பட்டார் திருமுருகன் காந்தி. சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்திய போலீஸார், அவரை நீதிமன்றக் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என நீதிபதியிடம் கோரிக்கை விடுத்தனர்.

இதற்கு மறுப்பு தெரிவித்த சைதாப்பேட்டை நீதிமன்ற நீதிபதி பிரகாஷ், ``எதன் அடிப்படையில் அவர் மீது தேசத் துரோக வழக்கு பதிவு செய்துள்ளீர்கள்? இதுகுறித்து எழுத்துபூர்வ பதில் மனு அளிக்க வேண்டும்.

மேலும், திருமுருகன் காந்தி மீது பதியப்பட்டுள்ள வழக்கில் அடிப்படை முகாந்திரம் இல்லாததால் அவரை நீதிமன்றக் காவலில் அடைக்க உத்தரவிட முடியாது. வேண்டுமானால் சென்னை சைபர் கிரைம் போலீஸின் விசாரணை அதிகாரி 24 மணி நேரம் அவரிடம் விசாரணை நடத்தலாம்" எனக் காட்டமாகத் தெரிவித்தார்.

இதையும் தவறாமல் படிங்க