இலங்கையை நோக்கி விழுந்தடித்து ஓடும் இந்தியர்கள்; ஏன் தெரியுமா?

  • Shan
  • September 10, 2018
435shares

இந்தியாவிலிருந்து அதிகமான மக்கள் இலங்கையை நோக்கிப் படையெடுப்பதாக இலங்கை சுற்றுலாத்துறை அறிவித்துள்ளது.

இதன்படி இலங்கையில் கடந்த மாதம் ஒட்டுமொத்தமாக சுற்றுலா பயணிகளின் வருகை ஐந்து சதவீதத்தால் அதிகரித்துள்ளது என கூறப்பட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் இலங்கைக்கு மொத்தமாக இரண்டு இலட்சத்து 359 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர் என்றும் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடும் போது இந்த எண்ணிக்கை ஐந்து சதவீத அதிகரித்துள்ளதாகவும் சொல்லப்பட்டுள்ளது.

இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகளாக வந்தவர்களில் அதிகமானவர்கள் இந்தியர்களாவர் என்பதுடன் இவர்களுக்கு அடுத்தபடியாக சீனா, பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்தும் அதிகப்படியான சுற்றுலாப் பயணிகள் இலங்கை வந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இலங்கையின் மிருகக் காட்சிச் சாலைகள் வனவிலங்குப் பூங்காக்கள் கடற்கரைகள் மற்றும் சமய ஸ்தலங்கள் என அனைத்துப் பிரதேசங்களுக்கும் மேற்படி சுற்றுலாப் பயணிகள் அணிதிரள்வது குறிப்பிடத்தக்கதாகும்.

இதையும் தவறாமல் படிங்க