காவலரை கத்தியால் குத்த முயன்ற புல்லட் நாகராஜ் ; பரபரப்பு வீடியோ காட்சிகள்.!

31shares
Image

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே ஜெயமங்களத்தை சேர்ந்தவன் புல்லட் நாகராஜன். பிரபல ரவுடியான இவன் மீது கொலை, கொள்ளை, ஆள்கடத்தல், வழிப்பறி என ஏராளமான வழக்குகள் உள்ளன. இவன் சில விவகாரங்கள் தொடர்பாக மதுரை சிறைத் துறை பெண் எஸ்பி ஊர்மிளா மற்றும் பெரியகுளம் தென்கரை பெண் இன்ஸ்பெக்டர் மதனகலா ஆகியோருக்கு தொலைபேசி வாயிலாக கடந்த சில நாட்களுக்கு முன்னதாக மிரட்டல் விடுத்தது தமிழகம் அதிர்ச்சியில் ஆழ்ந்திருந்தது.

இந்த நிலையில், இன்று மதுரை தென்கரை சிஎஸ்ஐ சர்ச் அருகில் ரவுடி நாகராஜ் சென்ற போது அவனை காவலர் காசிராஜன் என்பவரும் ஏடிஎஸ்பி சுருளிராஜன் ஆகியோர் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

நாகராஜை பிடித்த காவலர் கூறுகையில், அவனை அடையாளம் கண்டு பிடிக்க முற்பட்ட போது என்னை கத்தியால் குத்த முயன்றான் என தெரிவித்திருப்பது பரபரப்பினை கிளப்பியுள்ளது.

இதையும் தவறாமல் படிங்க