ஓரினச்சேர்க்கைக்கு சட்டபூர்வ அங்கீகாரம் ; ஹெச்.ராஜாவின் சர்ச்சை ட்வீட்.!

34shares
Image

பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா அவ்வப்போது ன கருத்துக்கள் பலவற்றை கூறி அதிர்வலைகளை உண்டாக்குபவர். பெரியார் சிலைகளை இடிக்க வேண்டும், கனிமொழி எம்.பி பிறப்பு ஆகியவை குறித்து ராஜா தெரிவித்த கருத்துக்கள் அரசியல் அரங்கில் மிகுந்த பரபரப்பினை உண்டாக்க்கியவை.

இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னதாக இந்தியாவில் ஓரினசேர்கைக்கு உச்ச நீதிமன்றம் சட்டபூர்வ அனுமதி அளிப்பதாக தெரிவித்தனையடுத்து அதற்கு ஆதரவும் எதிர்ப்பும் குவிந்துவருகின்றன.

இந்தியா மாதிரியான கலாச்சார பின்னணி நிறைந்த நாட்டில் ஓரின சேர்க்கைக்கு அனுமதி அளிப்பது எந்த வகையில் நியாயம் எனவும் கருத்துக்கள் ஒலித்துக்கொண்டிருக்க கூடிய சூழலில், பாஜக தலைவர்களுள் ஒருவரான ஹெச்.ராஜா, "மிருகங்களோ அல்லது தாவரங்களோ கூட ஓரினசேர்க்கை அல்லது தன்பால் ஈர்ப்பில் ஈடுபடாத போது மனிதன் மட்டும் ஏன் இப்படி? இதற்கு என்ன பதில் சொல்வது?" என தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். இந்த கருத்து பலத்த அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளது.

இதையும் தவறாமல் படிங்க