விண்ணைத்தொடும் பெட்ரோல் - டீசல் விலை ; அல்லல்படும் பொதுமக்கள்.!

11shares
Image

நாடு முழுவதும் நேற்று பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து பாரத் பந்த் என்ற பெயரில் காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைத்த முழு கடையடைப்பு போராட்டம் நடைபெற்ற நிலையில் இன்றும் எரிப்பொருள் விலை அதிகரித்துள்ளது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் சுமார் ரூ.84.5க்கு விற்பனையாகிறது.

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பெட்ரோல் - டீசல் விலை உயர்வினால் பொதுமக்கள் அதிகப்படியாக பாதிக்கப்படுகின்றனர். இன்னலுக்கு ஆளாகின்றனர் என்பதனை அரசுக்கு உணர்த்திடவே நேற்றைய தினம் பாரத் பந்த் நடத்தப்பட்ட நிலையில் இன்று மீண்டும் பெட்ரோல் - டீசல் விலையுயர்வு கண்டுள்ளது மக்களை கொதிப்பில் ஆழ்த்தியுள்ளது.

நேற்றைய தினத்தை ஒப்பிடுகையில் இன்று பெட்ரோல் விலை 14 காசுகள் உயர்ந்து ஒரு லிட்டர் ரூ. 84.5க்கு விற்பனையாகிறது. மேலும், ஒரு லிட்டர் டீசலின் விலை 15 காசுகள் உயர்ந்து ரூ.77.13க்கு விற்பனையாகிறது.

முன்னதாக, நேற்றைய தினம் பெட்ரோல் - டீசல் விலையுயர்வுக்கு நாங்கள் காரணமில்லை என பாஜக மூத்த தலைவர்கள் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க