இந்தியாவில் மனைவியின் தலையை துண்டாக வெட்டி கொலை செய்த கணவன் பொலிசாரிடம் சென்று சரணடைந்துள்ளார்.
இந்தியா, கர்நாடகா மாநிலத்தில் சதீஷ் வயது 35 என்ற சபருக்கும், ரூபா வயது 28 என்ற பெண்ணிற்கும் கடந்த 11 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.
இந்நிலையில் சதீஷ் கடந்த ஞாயிற்றுக் கிழமை கூர்மையான ஆயுதம் கொண்டு, மனைவியின் தலையை துண்டாக வெட்டியுள்ளார்.
அதன் பின் அதை ஒரு துணிப்பையில் வைத்துக் கொண்டு அருகில் இருக்கும் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று சரணடைந்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
“இவள் என்னை ஏமாற்றிவிட்டாள். தோட்டத்தில் ஒரு பையனுடன் இருப்பதைக் கண்டேன். இவளை கொலை செய்துவிட்டேன். அவன் தப்பி ஓடிவிட்டான்” என்றார்.
இக் காட்சியைப் பார்த்த பொலிஸார் சில நிமிடங்கள் ஸ்தம்பித்து நின்றனர். இதையடுத்து அவரை கைது செய்த பொலிசார், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.பின்னர் அங்கிருந்த பொலிஸார் சதீஸைக் கைது செய்து, வெட்டப்பட்ட ரூபாவின் தலையுடன் கொலை நடந்த இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினார்கள். பின் ரூபாவின் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு பொலிஸார் அனுப்பி வைத்தனர்.
சிக்மங்களூரு மாவட்ட நீதிமன்றத்தில் சதீஸை பொலிஸார் ஆஜர்படுத்திய நிலையில், அவரை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இது குறித்து சிக்மங்களூருபொலிஸ் எஸ்.பி. அண்ணாமலை குப்புசாமி கூறுகையில், ''மனைவியைக் கொலை செய்து தலையை வெட்டி எடுத்து வந்த சதீஸ் மீது ஐபிசி 302 பிரிவின் கீழ் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரை மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளோம். அவரை போலீஸார் விசாரணையில் எடுத்து விசாரிக்க இருக்கிறோம்'' எனத் தெரிவித்தார்.