ஈஷாவில் ஆண்மையை இழக்கச் செய்யும் தியான லிங்கம் - வெளியாகும் பகீர் உண்மைகள்.!

81shares
Image

ஈஷா என்றால் நம்மில் பெரும்பாலானோருக்கு நினைவுக்கு வருவது ஜக்கி வாசுதேவையும் அவரது தியான மடங்களையும் தான். லாப நோக்கற்ற அறக்கட்டளை என கூறிக்கொண்டு எண்ணற்ற ஏமாற்று நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும், கோவை பகுதியில் அப்பட்டமாக அத்துமீறல்கள் பலவற்றில் ஈஷா நிறுவனம் ஈடுபடுவதாகவும் பல காரணங்கள் கூறி பலதரப்பட்டவர்களால் அவ்வப்போது ஈஷா நிறுவனம் மீது வழக்கு தொடரப்பட்டு வருகிறது. ஆனால், அத்தகைய புகார்களிலிருந்து ஈஷாவை காப்பாற்றுவது அந்நிறுவத்திற்கு அரசுகளிடமிருக்கும் செல்வாக்கே என்ற கருத்தாக்கமும் பொதுமக்கள் மத்தியில் நிலவுகிறது.

இந்த நிலையில், இன்னுமோர் பகீர் தகவல் வெளியாகியுள்ளது. அது என்னவெனில், ஈஷாவில் அமைந்துள்ள தியான லிங்கம் மெர்குரியால் செய்யப்பட்டது எனவும், மெர்குரியோடு நெருங்குவது ஆண்மைக் குறைவை ஏற்படுத்தும் என்று மத்திய அரசின் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் அறிக்கை தெரிவிக்கின்ற நிலையில் இப்படியான தியான லிங்கத்தினை உருவாக்கி அதனிடத்தில் பக்தர்களை நெருங்க செய்வது ஏன் எனவும் கேள்விகள் எழுப்புகின்றனர் அறிவியலாளர்கள்.

இத்தகைய கடும் பாதிப்பை ஏற்படுத்தும் மெர்குரியால் செய்யப்பட்ட லிங்கம் அடங்கிய குளத்தில் குளித்தால், தீராத வினையெல்லாம் தீரும் என்று அறிவித்துள்ள ஜக்கி இந்தியாவில் மெர்குரி பயன்பாட்டை கட்டுப்படுத்துவதற்கு எவ்விதமான சட்ட திட்டங்களும் இல்லாத காரணத்தால், இத்தகைய கடுமையான சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும் மெர்குரியால் நான் ஒரு சிலையை உருவாக்கியிருக்கிறேன் என்று வெளிப்படையாக தெரிவித்தும் உள்ளார்.

மெர்குரி என்பது ஒரு விஷப்பொருள். சுற்றுச்சூழலுக்கு பெரும் ஆபத்தானது. மெர்குரியை சுவாசித்தாலோ, வாய் மூலம் உட்கொண்டாலோ, மூளை பாதிக்கப்படும் என்கிறது, ஐக்கிய நாடுகளின் சுற்றுச் சூழல் அமைப்பு. உண்மை நிலை இப்படியாக உள்ள நிலையில், கடவுளின் பெயரால் பக்தர்களை இப்படியான ஆபத்தினை நோக்கி தள்ளுவது என்ன நோக்கத்தின் அடிப்படையில் என அரசுகள் முறையாக விசாரித்து உண்மைகளை வெளிக்கொணர வேண்டும் என்பதுவே பொதுமக்களின் கருத்தாக உள்ளது.

இதையும் தவறாமல் படிங்க