ரஜினி சுத்த தமிழர் என்றால்.. நாங்கள் யார்? கொந்தளிக்கும் சீமான்.!

141shares
Image

முன்னாள் முதல்வர்கள் கலைஞர், ஜெயலலிதா ஆகியோரது மரணத்தை தொடர்ந்து அரசியல் களத்தில் ஓர் வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாகவும், அதனை தங்களாலேயே இட்டு நிரப்பிட முடியுமென கருதி ஆளுக்கோர் அமைப்பினை தொடங்கி உறுப்பினர்கள் சேர்க்கையை நடத்தி வருகின்றனர் திரையுலகின் முன்னணி நடிகர்களான ரஜினியும், கமலும்.

திரைத்துறை பிரபல்யத்தை அரசியல் களத்தில் அறுவடை செய்திட ரஜினிகாந்த் முயல்கிறதாக விமர்சனங்கள் அவர்களை நோக்கி வைக்கப்படுகிற நிலையில், பிறப்பால் தமிழரல்லாத பிழைப்பதற்காக எங்களை நாடி வந்த ரஜினி எங்களுக்கான தலைவராக முயல்வதினை ஒருபோதும் ஏற்க முடியாதென் மற்றுமோர் புறம் ரஜினியை மிக காட்டமாக எதிர்த்து வருகிறார் நாம் தமிழர் கட்சியின் சீமான்.

ஜனநாயக நாட்டில் தங்களுக்கான தலைவர்கள் யார் என மக்கள் தான் முடிவு செய்திட வேண்டுமே தவிர இனத்தின் வழி ஒருவரை எதிர்ப்பது ஏற்புடையதல்ல என சிலர் கருத்து தெரிவிக்கின்ற நிலையில், நேற்றைய தினம் அரசியல் நிகழ்வொன்றில் கலந்துகொண்டு பேசிய சீமான், " தமிழர்களிடத்தில் அரசியல் அடையாளம் பெறுவதற்காக நானும் பச்சை தமிழன் என பொய் பேசித்திரிகிறார் ரஜினி. இத்தகையோர்களையெல்லாம் எங்கள் கட்சி மிக மூர்க்கமாக எதிர்க்கவே செய்யும்" என பேசியுள்ளார்.

அதே சமயம், சீமானின் பேச்சுக்களுக்கு எவ்வித எதிர்வினையையும் ரஜினி ஆற்றாதது குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க