எம்.ஜி. ராமச்சந்திரன் சுடப்பட்ட கதை ; காரணமும், பின்னணியும்.!

44shares
Image

சினிமா துறையில் யாருக்கும் அஞ்சாமல் திராவிட கருத்தியலை தொடர்ச்சியாக தனது நாடகங்கள் வழியாகவும், திரைப்படங்கள் வழியாகவும் பேசி வந்தவர் நடிகவேள் எம்.ஆர். ராதா. முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களுக்கு கலைஞர் என்ற பட்டத்தினை அளித்தவர். தனது ரத்த கண்ணீர் என்ற நாடகத்தினால் சமூகத்தினுள் நிறைந்து கிடக்கிற சமூக அவலங்களை சாடியவர். அத்தகைய எம்.ஆர் ராதாவே தான் இலட்சோப இலட்சம் ரத்தத்தின் ரத்தங்களின் தலைவர் எம்ஜிஆரை சுட்டவர்.

1967-ம் ஆண்டு, ஜனவரி 12ம் தேதி மாலை 5 மணிக்கு எம்.ஜி.ஆர் வீட்டில் வைத்து தான் இந்த துப்பாக்கி சூடு நடந்தது. ஆம், ஏதோ ஓர் காரணத்திற்காக எம்ஜிஆரை சந்திக்க சென்று விவாதம், வாக்குவாதமாக வளர்ந்து துப்பாக்கி சூட்டில் முடிந்த கதை அன்றுதான் நடந்தது.

எம்ஆர்ராதாவை சினிமாவில் வளர விடாமல் தடுத்ததற்காகவே எம்ஜிஆரை அவர் சுட்டதாக காரணங்கள் தெரிவிக்கின்ற நிலையில், துப்பாக்கிச்சூட்டில் சிக்கிய எம்ஜிஆர் உயிர் பிழைத்தது ஆச்சரியதக்க அதிசயமே. அதே போல் எம்ஜிஆரை சுட்டுவிட்டு தன்னையும் சுட்டுக்கொண்ட ராதாவும் உயிர் தப்பியது சுவாரசியம்.

"அந்தத் துப்பாக்கி ரவைகள் பதினைந்து வருடங்களுக்கு முன்பு வாங்கப்பட்டவை. அவற்றை ஒரு டப்பாவில் போட்டு அடிக்கடி பயன்படுத்தும் மேஜை டிராயரில் வைத்திருந்தார். டிராயரில் இருந்த துப்பாக்கி ரவைகள் ஒன்றுக்கொன்று உருண்டு தேய்ந்ததால், ரவையின் மேல் பிணைக்கப்பட்டுள்ள கேட்ரிஜ் கேசின் பிடிமானம் தளர்ந்து போய்விட்டது. அதனால்தான் இரண்டு பேரின் உயிருக்கும் ஆபத்து ஏற்படவில்லை" என தடயவியல் நிபுணர் சந்திரசேகரன் பின்னர் அறிக்கை அளித்தார்.

அதன் பின்னர், சிறையிலிருந்து ராதா வெளிவந்து உடல்நல குறைவினால் உயிரிழந்தபோது (1979-ம் ஆண்டு செப்டம்பர் 17-ம் தேதி) அப்போது முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள முன்வந்தாலும், ராதா குடும்பத்தினர் மறுத்துவிட்டனர். அரசு மரியாதையையும் ஏற்றுக் கொள்ளவில்லை என்பது தனிக்கதை.

இதையும் தவறாமல் படிங்க
கோத்தபாய தொடர்பில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்! கொந்தளிக்கிறது தென்னிலங்கை!

கோத்தபாய தொடர்பில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்! கொந்தளிக்கிறது தென்னிலங்கை!

யாழில் உள்ள பிரபல பாடசாலையில் சற்று முன்னர் பதற்றம்!

யாழில் உள்ள பிரபல பாடசாலையில் சற்று முன்னர் பதற்றம்!

அனைத்துப் பெண்களுக்கும் அவசர எச்சரிக்கை: இலங்கையில் இப்படியும் நடக்கிறது!

அனைத்துப் பெண்களுக்கும் அவசர எச்சரிக்கை: இலங்கையில் இப்படியும் நடக்கிறது!