ராஜபக்சேவுக்கு சிவப்பு கம்பளம் விரித்த சு.சாமி ; பின்னணியில் பகீர் காரணம்.!

52shares
Image

தமிழகத்தை பாதிக்கும் எந்த ஓர் விவகாரத்திலும் ஒட்டுமொத்த தமிழகமும் ஓர் நிலையில் இயங்குகிறதென்றால் அதற்கு எதிர் மாறான நிலையில் இயங்குவது தமிழக பாஜக தலைவர்களின் வாடிக்கையான செயல். அந்த வகையில், எப்போதும் தமிழ் - தமிழருக்கு எதிரான கருத்துக்களை மட்டுமே தெரிவித்து வரக்கூடிய பாஜக மூத்த தலைவர்களுள் ஒருவரான சுப்ரமணிய சாமி.

அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்னதாக இந்திய நடுவண் அரசினால் வழங்கப்படும் பாரத ரத்னா விருதினை ஈழத்தமிழர்களை கொன்று குவித்த கொலைக்குற்றவாளி ராஜபக்க்ஷேவுக்கு அளிக்க வேண்டுமென தெரிவித்து சர்ச்சையை கிளப்பியிருந்தார்.

இந்த நிலையில், இன்று டெல்லி வந்துள்ள ராஜபக்க்ஷே சுப்ரமணிய சாமியை நேரில் சந்தித்து அளவளாவியுள்ளார். ஈழத்தில் எம் தொப்பூழ் கொடி உறவுகளை கொன்று குவித்த இனப்படுகொலையாளன் ராஜபக்ஷேவுக்கு சு.சாமி வரவேற்பளித்த பின்னணியில் 7 தமிழர் விடுதலை விவகாரம் உள்ளதாக கிசுகிசுகின்றன மத்திய அரசு வட்டாரங்கள்.

ராஜீவ் கொலையாளிகளை வெளிவிட கூடாதென பாஜக தலைமையை வலியுறுத்தும் படி சு.சாமியிடம் ராஜபக்சே டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதையும் தவறாமல் படிங்க