ராஜீவ் கொலைவழக்கு கைதிகள் பயங்கரவாதிகளா? கொங்ரசுக்கு பழ.நெடுமாறன் பதிலடி!

  • Prem
  • September 11, 2018
140shares

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட 7 பேரும் பயங்கரவாதிகள் என்பதால் அவர்களை விடுதலை செய்யக்கூடாது என கொங்கிரஸ் கட்சி செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா தெரிவித்த கருத்துக்கு தமிழர் தேசிய முன்னணித் தலைவர் பழ.நெடுமாறன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ராஜீவ்காந்தியின் கொலை வழக்கில் தண்டனை பெற்றவர்கள் இந்திய சட்டத்தின் 302-வது பிரிவின் கீழ்தான் தண்டிக்கப்பட்ட நிலையில் அவர்களைப் பயங்கரவாதிகள் என திசை திருப்பக்கூடாதெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் அரசியல் சட்ட பிரிவுகளின் கீழ் இவர்களின் தண்டனையைக் குறைத்து விடுதலை செய்யும்படி பரிந்துரை செய்யும் அதிகாரம் தமிழக அரசுக்கு உண்டெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ராஜீவ் கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட 7 பேர் விடுதலையில் தமிழக அரசு முடிவெடுக்கலாம் என இந்திய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டபின்னர் தமிழக அரசு அமைச்சரவையைக் கூட்டி இது தொடர்பான சாதகமான தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியிருந்தது.

இந்தநிலையில் இவர்கள் அனைவரும் பயங்கரவாதிகள் என்பதால் அவர்களை விடுதலை செய்யக்கூடாதென கொங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் தெரிவித்த கருத்துக்கு பரவலான கண்டனங்கள் வெளிப்படுத்தப்பட்டு வருகின்றன.

இதையும் தவறாமல் படிங்க