இம்மானுவேல் சேகரன் நினைவு தினம் ; கிழித்தெறியப்பட்ட திமுக, விசிக பேனர்கள்.!

17shares
Image

ஆண்டாண்டு காலமாக இந்த மண்ணில் நீங்காது நிலைபெற்றிருக்கும் சாதி கொடுமைகளை எதிர்த்து குரல் கொடுத்து போராடிய காரணத்திற்காக கடந்த 1957ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி சாதி வெறியர்களால் கொல்லப்பட்டார் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுவிக்காக குரலெழுப்பிய முன்னாள் ராணுவ வீரர் இம்மானுவேல் சேகரன்.

அவரின் நினைவினை அனுசரிக்கும் பொருட்டு ஆண்டுதோறும் பரமக்குடியில் உள்ள இம்மானுவேல் சேகரன் அவர்களின் நினைவிடத்தில் சமுதாய தலைவர்கள் தொடங்கி அரசியல் கட்சிகளின் தலைவர்கள், அமைச்சர்கள், பொதுமக்கள் ஆகியோர் அஞ்சலி செலுத்துவது வழக்கம். நினைவு தினத்தினையொட்டி அப்பகுதி முழுவதும் பரபரப்பாவதுடன், 144 தடை உத்தரவும் அமல்படுத்த படுவது வழக்கம்.

அந்த வகையில், நேற்றைய தினம் பரமக்குடியில் உள்ள இம்மானுவேல் சேகரன் அவர்களின் நினைவிடத்தில் புதிய தமிழகம் டாக்டர்.கிருஷ்ணசாமி, தமிழக மக்கள் முன்னேற்ற கழக ஜான் பாண்டியன், தினகரன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

அதே சமயம், அப்பகுதியில் இம்மானுவேல் சேகரன் நினைவு தினத்தையொட்டி திமுக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளின் சார்பாக வைக்கப்பட்ட பேனர்களை கிழித்தெறிந்தனர் பொதுமக்கள். தாழ்த்தப்பட்டோர் பட்டியலிலிருந்து தங்களை வெளியேற்றி வரலாற்று தரவுகளின் படி தங்களை தேவேந்திர குல வேளாளர்கள் என அறிவிக்க வேண்டும் என்ற அம்மக்களின் கோரிக்கையினை நீர்த்துப்போக செய்திடும் வகையில் திமுகவும், தங்களை தலித் வட்டத்திற்குள் திணிக்க விசிகவும் முயலுவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

முன்னதாக, இம்மானுவேல் சேகரன் நினைவிடத்திற்கு திருமாவளவன் அஞ்சலி செலுத்த நேரில் செல்லாதது குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க