ஓரினச்சேர்க்கை என்பது காட்டுமிராண்டித்தனம் - துரைமுருகன் ஆவேசம்.!

18shares
Image

கடந்த சில நாட்களுக்கு முன்னதாக இந்தியாவில் ஓரினசேர்கைக்கு உச்ச நீதிமன்றம் சட்டபூர்வ அனுமதி அளிப்பதாக தெரிவித்தனையடுத்து அதற்கு ஆதரவும் எதிர்ப்பும் குவிந்துவருகின்றன.

இந்தியா மாதிரியான கலாச்சார பின்னணி நிறைந்த நாட்டில் ஓரின சேர்க்கைக்கு அனுமதி அளிப்பது எந்த வகையில் நியாயம் எனவும் கருத்துக்கள் ஒலித்துக்கொண்டிருக்க கூடிய சூழலில், திமுகவின் பொருளாளரும், முன்னாள் தமிழக அமைச்சருமான துரைமுருகன் ஓரினச்சேர்க்கைக்கு சட்டபூர்வ அங்கீகாரமளித்ததை காட்டுமிராண்டித்தனம் என விமர்சித்துள்ளார்.

ஆணுக்கும் ஆணுக்கும், பெண்ணுக்கும் பெண்ணுக்கும் திருமணம் செய்வது காட்டுமிராண்டித்தனம். காட்டுமிராண்டித்தனத்திற்கு சட்டமும் சிலரும் துணைபோகிறார்கள் என நீதிமன்றத்தையும், ஓரினச்சேர்க்கை ஆதரவாளர்களையும் கடுமையாக சாடியுள்ளார் துரைமுருகன்.

முன்னதாக, மிருகங்களோ அல்லது தாவரங்களோ கூட ஓரினசேர்க்கை அல்லது தன்பால் ஈர்ப்பில் ஈடுபடாத போது மனிதன் மட்டும் ஏன் இப்படி? இதற்கு என்ன பதில் சொல்வது? என ஹெச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க