தீயில் கருகி ஒரு வயது குழந்தை உட்பட நால்வர் பலி! கொலையா?

31shares

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள கீழகொண்டூரில் வீடு ஒன்று சற்று நேரத்திற்கு முன்னர் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. இதுபற்றி காவல்துறை மற்றும் தீயணைப்பு துறைக்கு அருகிலிருந்த குடியிருப்பாளர்களால் தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு விரைந்த காவற்துறை மற்றும் தீயணைப்பு பிரிவினர் தீயை அணைப்பதற்கு பெரும் முயற்சி மேற்கொண்ட போதிலும் வீட்டினுள் சிக்கியவர்களை மீட்க முடியவில்லை. குறித்த வீட்டினுள் பெண் ஒருவர் மற்றும் அவரது 3 பிள்ளைகளும் உடல் கருகி இருந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

அங்கு சென்ற பொலிஸார் ஆரம்பகட்ட விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர். அவ் விசாரணையில் குறித்த பெண்ணுக்கு குடும்ப பிரச்சினை இருந்து வந்தது தெரியவந்துள்ளது. எனவே, குடும்ப பிரச்சினை காரணமாக குழந்தைகளுடன் தீக்குளித்து இறந்திருக்கலாம் என தெரிகிறது. குறித்த சம்பவம் தொடர்பில் காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மூவரும் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது.

இதையும் தவறாமல் படிங்க