ஏழு தமிழர் விடுதலை விவகாரத்தில் அரசியல் செய்யாதீர் - விஜயகாந்த் வேண்டுகோள்.!

29shares
Image

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த 28 ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்து வரும் பேரறிவாளன், சாந்தன், முருகன் உள்ளிட்ட 7 பேரையும் விடுவிக்குமாறு ஆளுநருக்கு தமிழக அமைச்சரவை பரிந்துரை அளித்துள்ளது. இதையடுத்து, பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரும் எப்போது விடுவிக்கப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஏழு பேரின் விடுதலைக்கு ஆளுநர் விரைவில் முடிவெடுக்க வேண்டும் என்று தமிழகத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் பலர் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் ஏழு தமிழர் விடுதலை விவகாரம் தொடர்பாக அறிக்கை விடுத்துள்ளார் தேமுதிகவின் பொதுச்செயலாளர் விஜயகாந்த். அதில், "முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ்காந்தி தமிழகத்தில் படுகொலை செய்யப்பட்டதை என்றைக்கும், யாராலும் ஏற்றுக்கொள்ளமுடியாது. ஆனாலும் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, பல ஆண்டுகாலமாக சிறைதண்டனையை அனுபவித்து வரும் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி உள்ளிட்ட ஏழு பேரையும் இன்னும் காலம் தாழ்த்தி அரசியல் நடத்தாமல், அவர்களுக்கு நல்ல தீர்ப்பு தரவேண்டும்.

ஏனென்றால் அவர்கள் பல ஆண்டுகள் சிறைத்தண்டனையை அனுபவித்ததை கருத்தில் கொண்டு மத்திய அரசும், மாநில அரசும், ஆளுநரும் இந்த பிரச்சனையில் தலையிட்டு உடனடியாக ஏழுபேரையும் விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கின்றேன்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் தவறாமல் படிங்க