இரண்டாவது முறையாக நின்றுபோன அதிமுக எம்எல்ஏவின் திருமணம் - சோகத்தில் எம்எல்ஏ.!

45shares
Image

ஈரோடு மாவட்டம், பவானிசாகர் தொகுதி அதிமுக எம்எல்ஏ-வான ஈஸ்வரனுக்கு, உக்கரம் ஊராட்சி மில்மேடு பகுதியைச் சேர்ந்த ரத்தினசாமி - தங்கமணி தம்பதியின் மகள் சந்தியாவை திருமணம் செய்துவைக்க நிச்சயிக்கப்பட்டது. இவர்களின் திருமணத்தை 12-ம் தேதியான இன்று நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்த திருமணத்தை முதலமைச்சரும் துணை முதலமைச்சரும் நடத்திவைப்பார்கள் என்று பத்திரிகைகள் அச்சடிக்கப்பட்டிருந்தன.

ஆனால், கடந்த 1 ஆம் தேதி வெளியே சென்ற சந்தியா வீடு திரும்பவில்லை என அவரின் தாயார் தங்கமணி கடத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் அடிப்படையில், தனிப்படை போலீசார், மணப்பெண்ணை தீவிரமாக தேடி வந்தனர்.தனது கல்லூரி தோழி சத்யா என்பவரது வீட்டில் சந்தியா தங்கியிருந்தது தெரியவந்தது. அவரை போலீசார் மீட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

அப்போது 43 வயதாகும் ஈஸ்வரன் எம்.எல்.ஏ., தன்னை விட 20 வயது மூத்தவர் என்றும் அவருக்கு கட்டாயப்படுத்தி திருமணம் செய்துவைக்க முயற்சிப்பதாகவும் நீதிபதியிடம் சந்தியா வாக்குமூலம் அளித்தார். இதனால்தான் வீட்டைவிட்டு வெளியேறியதாகவும் அவர் கூறினார். இதையடுத்து, விருப்பம் இல்லாமல் பெண்ணிற்கு திருமணம் செய்துவைப்பது தவறு என்றும், சந்தியாவை திட்டவோ அவதூறாக பேசவோ கூடாது என்றும் அவரது பெற்றோருக்கு நீதிமன்றம் அறிவுரை வழங்கியிருந்தது.

இதனிடையே, எம்எல்ஏ., ஈஸ்வரனுக்கு ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட அதே தேதியில், வேறு ஒரு உறவுக்கார பெண்ணுடன் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியானது. இதனால் இன்று திருமணம் நடைபெறும் என அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகள், உறவினர்கள், நண்பர்கள் என அனைவரும் எதிர்பார்ப்புடன் இருந்தனர். ஆனால் இன்று நடைபெறவிருந்த அந்த திருமணமும் நிறுத்தப்பட்டது.

வரும் ஐப்பசி மாதம் திருமணம் நடைபெறவிருப்பதாகவும் எம்எல்ஏ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் தவறாமல் படிங்க