சுப்பிரமணிய சாமியையெல்லாம் புலிகள் ஒரு பொருட்டாக கூட மதிப்பதில்லை - திருமா பேச்சு.!

38shares
Image

பாஜக தலைவர்களுள் ஒருவரும், எப்போதும் தமிழ் - தமிழருக்கெதிரான நிலைப்பாட்டினை கொண்டிருப்பவருமான சுப்ரமணிய சாமிக்கு வழங்கப்படும் போலீஸ் பாதுகாப்பு குறித்து விமர்சித்துள்ளார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாளவன்.

வலதுசாரி பயங்கரவாத சக்திகளை கண்டறிந்து அரசுகள் முடக்க வேண்டமெனவும், ஜனநாயக - முற்போக்கு சக்திகளுக்கு உரிய பாதுகாப்பினை அரசு வழங்கிட வேண்டுமெனவும் கோரி சென்னை விசிக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. நிகழ்வில் வேல்முருகன், இடதுசாரி தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் பேசிய திருமா, " மாற்று கருத்துக்கொண்டவர்களை தீர்த்துக்கட்ட நினைப்பது என்பது ஏற்றுக்கொள்ள இயலாத ஒன்று. சமூகத்தில் உள்ள எழுத்தாளர்கள் உள்ளிட்ட முற்போக்கு ஜனநாயக சக்திகளுக்கு உரிய பாதுகாப்பினை அரசு வழங்கிட வேண்டும்" என பேசினார்.

மேலும், " சுப்ரமணிய சாமிக்கெல்லாம் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படுகிறது. விடுதலைப் புலிகளால் அவருக்கு அச்சுறுத்தலாம். புலிகள் சுப்ரமணிய சாமியையெல்லாம் எப்போதும் ஒரு பொருட்டாக மதித்ததே கிடையாது" என எள்ளல் தொனியில் பேசினார்.

இதையும் தவறாமல் படிங்க
யாழில் வெளிநாட்டு மாப்பிள்ளையின் கண் முன்னே இளம்பெண் எடுத்த விபரீத முடிவு; அதிர்ச்சியில் குடும்பத்தினர்!

யாழில் வெளிநாட்டு மாப்பிள்ளையின் கண் முன்னே இளம்பெண் எடுத்த விபரீத முடிவு; அதிர்ச்சியில் குடும்பத்தினர்!

திருகோணமலை விரிவுரையாளரான எனது மனைவியின் மரணத்தில் சந்தேகம் உள்ளது; வன்னியூர் செந்தூரன்!

திருகோணமலை விரிவுரையாளரான எனது மனைவியின் மரணத்தில் சந்தேகம் உள்ளது; வன்னியூர் செந்தூரன்!

வன்னி யுத்தத்தின்போது விடுதலைப் புலிகள் இப்படிச் செய்வார்கள் என்றுதான் அனைவரும் எதிர்பார்த்தார்கள்

வன்னி யுத்தத்தின்போது விடுதலைப் புலிகள் இப்படிச் செய்வார்கள் என்றுதான் அனைவரும் எதிர்பார்த்தார்கள்