அழகு நிலையத்திற்குள் புகுந்து பெண்ணை அடித்து உதைத்த திமுக பிரமுகர் - பரபரப்பு சிசிடிவி காட்சிகள்.!

40shares
Image

பெரம்பலூர் பாரதிதாசன் நகரில் அழகு நிலையம் நடத்தி வருபவர் சத்தியா. இவருக்கும் பெரம்பலூர் வேப்பந்தட்டை அன்னமங்கலத்தை சேர்ந்த முன்னாள் திமுக மாவட்ட கவுன்சிலர் செல்வகுமார் (52) என்பவருக்கும் பணத்தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த மே மாதம் 25 ஆம் தேதி அழகு நிலையத்திற்குள் நுழைந்த திமுகவின் பொதுக்குழு உறுப்பினரும், முன்னாள் கவுன்சிலருமான செல்வகுமார், குடிபோதையில் அந்த பெண்ணை சரமாரியாக அடித்து உதைத்து தாக்கியுள்ளார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி அதிர்வலைகளை கிளப்பியுள்ளன.

இது குறித்து சத்யா அளித்த புகார் மீது போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து அவர் வீடியோ காட்சிகளை வாட்ஸ்அப்பில் வெளியிட்டுள்ளார். இதையடுத்தே இந்த சம்பவம் தொடர்பாக பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி திமுக முன்னாள் கவுன்சிலர் செல்வகுமாரை கைது செய்துள்ளனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக, செல்வகுமாரை தற்காலிக நீக்கம் செய்து திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் உத்தரவிட்டுள்ளார். முன்னதாக, பிரியாணி இலவசமாக வேண்டுமென கேட்டு பிரியாணி கடையை திமுகவினர் அடித்து நொறுக்கியது குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க