ஆய்வுக்கு சென்ற அதிகாரி ; அதிரடி விருந்து வைத்த ஆசிரியர்கள்.!

36shares
Image

தமிழகம் முழுவதும் இயங்கிவரக்கூடிய அரசு பள்ளிகளுக்கு கல்வித்துறை சார்ந்த உயர் அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வுக்கு செல்வது வழக்கம். பள்ளி மாணவர்களின் நிலை, ஆசிரியர்களின் போதிக்கும் திறன், பள்ளியின் சூழல் உள்ளிட்டவை குறித்து நேரில் பார்த்து அறிந்துகொண்டு அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காகவே இத்தகைய ஆய்வுகள் துறை ரீதியாக மேற்கொள்ளப்படுகின்றன.

இந்த நிலையில், வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு ஒன்றிய தொடக்க கல்வி அலுவலகத்தில் வட்டார கல்வி அலுவலராக பணி புரிந்து வரக்கூடிய மோகன் என்பவர் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு பேரணாம்பட்டு அடுத்த எம்ஜிஆர் நகரில் இயங்கி வரும் ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளிக்கு ஆய்வு செய்ய சென்றுள்ளார்.

மதிய உணவு நேரத்தில் அந்த பள்ளியில் இருந்த ஒரு வகுப்பறையில் ஆசிரியர்களின் வகுப்பறை மேஜைகளை போட்டு திடீர் டைனிங் டேபிள் ஏற்பாடு செய்துள்ளனர். பின்னர், அங்கு பணிபுரியும் ஆசிரியர்கள் கொண்டு வந்த மீன், இறைச்சி, பிரியாணி என தடபுடல் விருந்து அதிகாரிக்கு பரிமாறப்பட்டுள்ளது.

அது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில், இத்தகைய விருந்து எதற்காக? பள்ளியுள்ள குறைகளை மறக்கடிக்கவா என்ற வாசகங்களுடன் வெளியாகி வைரலாகிவருகின்றன.

இதையும் தவறாமல் படிங்க