சிறையா? உல்லாச விடுதியா? வெளியான அதிர்ச்சி புகைப்படங்கள்.!

37shares
Image

சென்னை புழல் சிறையில் உயர் பாதுகாப்பு பிரிவில் அடைக்கப்பட்டிருக்கும் கைதிகள் சிலருக்கு விதிகளை மீறி, சொகுசுப் படுக்கை, மின்விசிறி, டி.வி, டி.வி.டி, நாற்காலிகள், சமையலறை உள்ளிட்ட வசதிகள் கொடுக்கப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

செல்போன்கள், உயர் ரக ஷூக்கள், கூலிங் கிளாஸ் சகிதம் சிறையில் கைதிகளில் சிலர், சொகுசுவாழ்க்கை வாழ்வதாகவும் புகார் எழுந்தன. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து சிறைத்துறை ஏடிஜிபி அசுதோஷ் சுக்லா புழல் சிறையில் அதிரடி ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தியதாகக் கூறப்படுகிறது. உயர் பாதுகாப்பு வகுப்பு சிறையில் இருந்த 20 டி.வி.க்கள் அசுதோஷ் சுக்லா உத்தரவின் பேரில் அகற்றப்பட்டுள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.

முன்னதாக, சிறைத்துறை அதிகாரிகளுடன் கூட்டுவைத்துக்கொண்டு கைதிகள் தங்களுக்கான வசதிகளை சிறையினுள்ளே செய்துகொள்வதாக தகவல்கள் உலா வந்துகொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க