விடுதலைப் புலிகளை வெகுவாக நேசித்த பால் தாக்கரே.. ஏன் தெரியுமா?

141shares
Image

பால் தாக்கரே என்ற பெயரை கேட்கும்போதே நம்முள் மண்ணின் மைந்தர்கள் என்ற கோஷமும் கேட்கத்துவங்கும். அதற்கான காரணம் அப்படியான அரசியலை முன்னெடுத்தவர் பால் தாக்கரே. "நாட்டின் பாதுகாப்பு தன்மை உறுதிப்படுத்தப்பட வேண்டுமெனில் இஸ்லாமியர்களை ஒழித்துக்கட்ட வேண்டும். அப்போதுதான், நாடு வலிவு பெறும். இந்தியா இந்து ராஜ்ஜியம் என்றுதான் அழைக்கப்பட வேண்டும்" என பேசியவர் அவர்.

1950களில் கேலிச்சித்திரக்காரராக வாழ்க்கையை தொடங்கியவரின் ( பால் தாக்கரே) பெயரைக்கேட்டால் எளியோர்களின் மனங்களில் அச்சம் கிளம்பும் வகையிலான அரசியலை முன்னெடுத்த பால் தாக்கரே சிறந்த சொற்பொழிவாளர், ஒருங்கிணைப்பாளர் என மற்ற அரசியல் தலைமைகளாலும் பாராட்டப்பட்டவர். தனது கட்சி பத்திரிகையான சாம்னாவில் ( எதிர்த்து நில்) அவர் தீட்டும் கட்டுரைகள் கனல் தெறிக்கும் வகையிலானவை என்றால் அதில் மிகையில்லை.

1960-70களில் மகாராஷ்டிராவில் உள்ள அயல் மாநிலத்தவருக்கெதிரான அரசியலை தாக்கரே முடுக்கி விட்டவர்.

அப்படியான பால் தாக்கரே, தமது தார்மீக உரிமைகோரி ஆயுத வழி போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலைப் புலிகளை வெகுவாக ஆதரிப்பதாக தெரிவித்தார். அதற்கான காரணமாக அவர் தெரிவித்தது, விடுதலைப் புலிகளின் கம்பீரமான போராடும் முறையை தான். மேலும், இந்திய அரசு புலிகள் மீதான தடையை நீக்கிட வேண்டுமெனவும் அவர் விரும்பினார். அதை வெளிப்படையாக தெரிவிக்கவே செய்தார்.

இதையும் தவறாமல் படிங்க