ஏழை என்பதால் கைவிட்ட காதலன் ; எலி மருந்து தின்று உயிர்விட்ட மாணவி - மதுரையில் பயங்கரம்.!

58shares
Image

மதுரையில் காதலி ஏழை என்பதை சுட்டிக்காட்டி திருமணம் செய்து கொள்ள காதலன் மறுத்ததால் கல்லூரி மாணவி எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பலத்த அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளது.

காதலென்பது இரு உயிர்களுக்கு இடையே அரும்பி துளிர்த்து ஆல் போல் தழைத்து நிற்கும் உன்னத உணர்வு என்பதெல்லாம் காதலிக்கும் வரையில் தான். காதலை தாண்டி திருமணம் என வருகின்ற போது சார்ந்தோர் இருவரின் பின்புலம், சாதி, மதம் ஆகியவை மிக முக்கிய பங்காற்றுவதனை நம்மால் அதிகளவில் காண முடியும்.

அப்படி மதுரை மாவட்டம் திருவாதவூரை சேர்ந்த சிந்துஜா என்பவரும், சிவகாசியை அடுத்த திருத்தங்கலை சேர்ந்த ராம்குமார் கடந்த நான்கு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இடையில் திருமணம் குறித்து சிந்துஜாவின் வீட்டிற்கு ராம்குமாரின் வீட்டார் சென்றதாக கூறப்படுகிறது.

அப்போது, பெண்ணின் வீட்டார் ஏழ்மையில் உழல்வதை அறிந்துகொண்ட ராம்குமாரின் வீட்டார் இந்த காதலுக்கு மறுப்பு தெரிவித்ததுடன் சிந்துஜாவிடமும் பேச வேண்டாம் என தெரிவித்ததாகவும், அதை அப்படியே ராம் குமார் பின்பற்றிய காரணத்தினால் நான்கு வருட காதல் முறிந்துபோன சோகத்தில் சிந்துஜா எலி மருந்தை பேரிச்சம் பழத்தில் வைத்து தின்று தற்கொலை செய்துகொண்டு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

பணபலம் தான் முக்கியமானதென்றால் காதலிப்பதனை ராம்குமார் தவிர்த்திருக்கலாம் எனவும், தமது குடும்ப சூழலை கருத்தில் சிந்துஜா கொண்டு கல்வியில் மட்டும் கவனம் செலுத்தியிருக்கலாம் எனவும் சோகத்துடன் தெரிவிக்கின்றனர் அப்பகுதி பொதுமக்கள்.

இதையும் தவறாமல் படிங்க