ரஜினியை தனியே அழைத்து நையப்புடைத்த எம்.ஜி.ஆர்? லதாமூலம் வெளிவந்த தகவல்!

498shares
Image

முன்னாள் முதல்வரும், அதிமுக நிறுவருமான எம்ஜிஆர் நடிகர், அரசியல்வாதி என்ற பல முகங்களை கடந்து திரைத்துறையில் அவர் உச்ச நச்சத்திரமாக விளங்கிய காலத்தில் பிற நடிகர்களின் மீதும், திரைத்துறை பிரபலங்களின் மீது அதிகப்படியாக ஆதிக்கம் செலுத்தியவர் என்ற விமர்சனமும் சிலரால் வைக்கப்படுவதுண்டு.

அப்படி எம்ஜிஆரின் அழுத்தம் காரணமாக பாதிக்கப்பட்ட நட்சத்திரங்கள் பலர் என்றும் அவர்களில் ரஜினியும் ஒருவர் என்றும் திரைத்துறையில் வெகுநாட்களாகவே கிசுகிசுக்கப்படுவது உண்டு.

அது என்னவெனில், நடிகை லதாவை ரஜினி ஒரு தலையாக காதலித்ததாகவும் அவரிடம் சில அத்துமீறல்களில் ஈடுபட்டதாகவும் இதை கேட்டு கோபமுற்ற எம்ஜிஆர், ரஜினியை ராமாவரம் தோட்டத்திற்கு தூக்கிவரச்செய்து நையப்புடைத்து அனுப்பியதாகவும் சிலர் அவ்வப்போதுபேசிவருவது உண்டு.

இந்த நிலையில், எம்ஜிஆரால் தாக்கப்பட்டாரா ரஜினி என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார் நடிகை லதா. தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றுக்கு பதிலளித்த லதா, முதலில் மேற்கண்ட விவகாரம் குறித்து பேச மறுத்து பின்னர் அப்படியான எந்த சம்பவமும் நடைபெறவில்லை என மறுத்துள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க