திமுகவும், காங்கிரஸும் இனப்படுகொலையாளர்கள் - ஒப்புதல் வாக்குமூலம் அளித்தாரா ராஜபக்சே.!

25shares
Image

கடந்த சில தினங்களுக்கு முன்னதாக இந்தியாவுக்கு வந்திருந்த இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே, இலங்கை ராணுவத்திற்கும், புலிகள் இயக்கத்திற்கும் இடையே நடைபெற்ற இறுதி கட்ட போரின் போது காங்கிரஸ் தலைமையிலான இந்திய அரசு தங்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கியதாக தெரிவித்து சர்ச்சைகளை கிளப்பியிருந்தார். மேலும், இந்தியாவின் அப்போதைய உதவி என்றென்றும் மெச்சத்தகுந்தது என அவர் தெரிவித்திருந்தது தமிழக அரசியல் களத்தை கொந்தளிக்க செய்துள்ளது.

தொடர்ச்சியாக தமிழ் - தமிழர் விரோத போக்குடைய அரசுகளாக தங்களை சித்தரித்து வரும் திமுக மற்றும் அதன் ஆதரவு கட்சிகளை விமர்சிக்க ராஜபக்சேவின் வாக்குமூலத்தை ஆயுதமாக பயன்படுத்த துணிந்துவிட்டன எடப்பாடி மற்றும் மோடி அரசுகள். அதன் வெளிப்பாடே, 25 ஆம் தேதி ஈழ விவகாரத்தினை முன்னிறுத்தி அனைத்து மாவட்டங்களிலும் கண்டன பொதுக்கூட்டம் எனஅதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் இயற்றப்பட்டது என்கிறார்கள் அதிமுக நிர்வாகிகள்.

ஒன்றரை லட்சம் ஈழத் தமிழர் படுகொலைக்கும் பல்லாயிரக்கணக்கான பெண்கள் பாலியல் கொடுமைகளுக்கு ஆளானதற்கும் உடந்தையாகச் செயல்பட்ட தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி அரசின் படுகொலைகளை சர்வதேச போர்க்குற்றங்களாகக் கருதி சம்பந்தப்பட்டவர்களை போர்க்குற்ற வாளிகளாகத் தண்டிக்க வேண்டும் என்பதாக அமைந்துள்ளது அதிமுகவின் தீர்மானம்.

லட்சக்கணக்கிலான தமிழ் மக்கள் கொன்றொழிக்கப்பட்ட போது மத்திய காங்கிரஸ் ஆட்சியில் பங்கு வகித்துவிட்டு இப்போது எங்களை தமிழர் விரோத சக்தியாக சித்தரிக்கிறார்களா என தமிழிசையும் ஸ்டாலினை விமர்சித்திருந்த நிலையில், ராஜபக்சேவின் இந்தியா உதவி குறித்த பேட்டியினை ஓர் ஒப்புதல் வாக்குமூலமாகவே முன் வைத்து அரசியல் போக்குக்களை செயல்படுத்த துவங்கிவிட்டது அதிமுக.

இதையும் தவறாமல் படிங்க