நக்கீரன் கோபாலை பிரிவு 124ன் கீழ் கைது செய்தது செல்லாது - நீதிமன்றம் அதிரடி.!

28shares
Image

தமிழகத்தின் முன்னணி ஊடக நிறுவனங்களுள் ஒன்றான நக்கீரன் குழுமத்தின் தலைவரும், நக்கீரன் இதழின் ஆசிரியருமான கோபால் இன்று காலை சென்னை விமான நிலையத்தில் காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.

கல்லூரியில் பயிலும் மாணவிகளை தவறான வழிக்கு அழைத்துசெல்ல முயன்ற பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் ஆளுநருக்கு தொடர்பு இருப்பதாக நக்கீரன் இதழில் கட்டுரை வெளியானதை அடிப்படையாக கொண்டே அவர் மீது சட்டப்பிரிவு 124ன் கீழ் (குடியரசு தலைவர் / ஆளுநரை பணி செய்ய விடாமல் தடுப்பது) வழக்கு பதிவு செய்யப்பட்டதாக காவல் துறையினரால் தெரிவிக்கப்பட்ட நிலையில், நக்கீரன் கோபாலின் கைதுக்கு பல தரப்பிலிருந்தும் பலத்த கண்டணங்கள் குவிந்தன.

தொடர்ந்து கோபாலுக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு அவர் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

நீதிபதிக்கு முன்னதாக அரசு தரப்பு மற்றும் கோபால் தரப்பும் தங்களது வாதங்களை முன் வைத்த நிலையில், ஊடகங்களின் பிரதிநிதியாக இந்து குழும தலைவர் என்.ராமும் தனது கருத்தை நீதிபதியின் முன்னர் பதிவு செய்தார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, சட்டப்பிரிவு 124ன் கீழ் குடியரசு தலைவர் / ஆளுநரை பணி செய்ய விடாமல் தடுப்பது) நக்கீரன் கோபாலை கைது செய்யப்பட்டது செல்லாது. அதன் கீழ் அவரை சிறையிலடைக்க முடியாது என உத்தரவிட்டு தீர்ப்பளித்தார்.

இதையும் தவறாமல் படிங்க
`