ராமர் கோவிலை கட்டாமல் அமைதி காப்பது ஏன்? பாஜகவை விளாசும் சிவசேனா.!

7shares
Image

மத்தியில் ஆட்சியிலுள்ள பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு அயோத்தியில் ராமர் கோவிலை கட்டுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளாமல் அமைதி காப்பது ஏன்? என கேள்வியெழுப்பியுள்ளது சிவசேனா கட்சி.

அக்கட்சியின் அதிகாரபூர்வ நாளிதழான சாம்னாவில் இது குறித்து எழுதப்பட்டுள்ள தலையங்கத்தில், கடந்த 2014 ஆம் ஆண்டில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியமைக்க முக்கியமான காரணம் அப்போது அவர்கள் வழங்கிய ராமர் கோவில் அயோத்தியில் விரைவாக கட்டுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுமென்ற வாக்குறுதி தான்.

ஆனால், ஆட்சிக்கு வந்து இத்தனை நாட்கள் கடந்த போதும், ராமர் கோயில் கட்டுவது குறித்த விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் இருக்கிறது, நீதிமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும் என்று பாஜக கபட நாடகம் போடுகிறது. ராமர் கோயில் குறித்துப் பேசினால், நீதிமன்றத்தைக் காரணம் காட்டி பாஜக தப்பித்துவிடுகிறது.

முத்தலாக் விவகாரத்தில் அவசரச் சட்டம் கொண்டு வர பாஜக அரசால் முடிகிறது, நீதிமன்ற உத்தரவுக்கு மாறாக எஸ்சிஎஸ்டி பாதுகாப்புச் சட்டத்தில் அவசரச் சட்டத்தை பாஜக அரசு பிறப்பிக்கிறது. ஆனால், ராமர் கோயில் கட்டுவதற்கும், பொது சிவில் சட்டம் கொண்டுவருவதற்கும் ஏன் அவசரச்சட்டத்தை பாஜக அரசால் பிறப்பிக்க முடியவில்லை என ராமர் கோவில் விவகாரத்தை முன் வைத்து பாஜகவை மிக கடுமையாக சாட்டியுள்ளது சிவசேனா.

இதையும் தவறாமல் படிங்க
`