நிர்மலாதேவியை பற்றி எழுதினால் ஆளுநருக்கு ஏன் பயம் வருகிறது? முத்தரசன் கேள்வி.!

13shares
Image

கல்லூரி மாணவிகளை தவறாக பயன்படுத்திட முயன்ற பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் ஆளுநர் மாளிகை உள்ளிட்ட பெரும் புள்ளிகளுக்கு தொடர்புள்ளதாக துவக்கம் முதலே செய்திகள் வெளியாகிக்கொண்டிருந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக உண்மைகளை சிறைக்குள் உள்ள நிர்மலா தேவி வெளியிட முயன்றால் அவரை கொல்ல சதி நடப்பதாக நக்கீரன் இதழில் கட்டுரை வெளியிடப்பட்டிருந்தது.

அந்த கட்டுரையை காரணம் காட்டி, நேற்று நக்கீரன் இதழின் ஆசிரியர் கோபாலை சட்டப்பிரிவு 124ன் ( ஆளுநர் / குடியரசு தலைவரை பணி செய்ய விடாமல் தடுப்பது) கீழ் கைது செய்தது காவல்துறை. மேலும், அவரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த வேண்டுமெனவும் நீதிமன்றத்தில் காவல்துறை சார்பில் கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில், இரு தரப்பு வாதத்தையும், ஊடக பிரதிநிதியாக நீதிமன்றம் வந்த என்.ராம் அவர்களின் கருத்துக்களையும் கேட்டதன் பின்னர் கோபாலை 124ன் கீழ் கைது செய்தது செல்லாது என அதிரடியாக தீர்ப்பளித்து விடுதலை செய்தார் நீதிபதி.

மேற்கண்ட விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், " கல்லூரி மாணவிகளை தவறாக பயன்படுத்த முயன்ற நிர்மலா தேவி விவகாரம் குறித்து வேறு எவரும் புலனாய்வு செய்து செய்திகளை வெளியிடாத நிலையில் நக்கீரன் அதனை தொடர்ச்சியாக செய்ததன் காரணமே அதன் ஆசிரியர் கைது செய்யப்பட காரணம். நிர்மலாதேவி மாணவிகளிடம் தவறான வழிக்கு அழைத்து செல்ல முயன்றார். ஆனால், யாருக்காக முயன்றார் என்பதற்கான விடைகளை நக்கீரன் வெளியிடுவதனாலேயே ஆளுநர் பீதியில் உள்ளார். அவர் உடனடியாக பதவி விலகிட வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க
`