தேர்தல் சமயத்தில் பொய்யான வாக்குறுதிகளை அளித்தோம் - மத்திய அமைச்சர் ஓபன் டாக்.!

27shares
Image

கடந்த 2014 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலின் போது தங்கள் கட்சியின் சார்பில் பொய்யான பல வாக்குறுதிகளை அளித்ததாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார் பாஜகவின் மூத்த தலைவர்களுள் ஒருவரும், மத்திய அமைச்சருமான நிதின் கட்கரி.

மத்திய அமைச்சர் நிதின் கட்காரி மற்றும் பிரபல பாலிவுட் நடிகர் நானா படேகர் ஆகியோர் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டனர்.

அதில் அமைச்சர் நிதின் கட்காரி பேசும் போது, "கடந்த தேர்தலின் போது நாங்கள் ஆட்சிக்கு வருவோம் என எதிர்ப்பார்க்கவில்லை, அதனால் நாட்டு மக்களுக்கு பெரிய பெரிய வாக்குறுதிகளை கொடுத்தோம். ஒருவேலை நாங்கள் ஆட்சிக்கு வராமல் போயிருந்தால் அதற்கு நாங்கள் பொருப்பேற்று இருக்க வேண்டியதில்லை.

ஆனால், மக்கள் எங்களுக்கு வாக்களித்து ஆட்சியில் அமர்த்திவிட்டார்கள். அதனால், நாங்கள் அளித்த வாக்குறுதிகள் என்னவாயிற்று என மக்கள் கேட்கிறார்கள். இப்போதைக்கு அதைப்பற்றி சிரித்துக்கொண்டே கடந்து செல்கிறோம்" என தெரிவித்தார்.

நிதின் கட்கரி இப்படி வெளிப்படையாக பேசிய அந்த வீடியோ இணையத்தில் வைராலக பரவி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் தவறாமல் படிங்க
`