அண்மைக்காலமாக தொடர்ந்து அவமானப்படுத்தப்பட்டு வருகிறேன் - வைரமுத்து வேதனை!

125shares
Image

பெண்கள் தங்களது அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் எதிர்கொள்ளும் பாலியல் ரீதியிலான தொந்தரவுகளை வெளிப்படுத்துவதற்காக, அவை குறித்து விவாதிப்பதற்காக இணையத்தில் #mee too என்ற பரப்புரை மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இந்த பரப்புரையில் உலகளாவிய புகழ் பெற்ற பெண்களும் கூட தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொந்தரவுகள் வெளிப்படுத்திவருகின்றனர். அவை கேட்போர்களை அதிர்ச்சியடைய செய்பவையாகவும் உள்ளது.

அந்த வகையில் தமிழ்த்திரைப்பட படலாசிரியரும்,கவிஞருமான வைரமுத்து தனக்கு பாலியல் ரீதியிலான தொந்தரவுகளை அளித்ததாகவும், தன்னை போன்றது இன்னும் பல பெண்கள் அவரால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பிரபல பாடகி சின்மயி புகார் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தமிழ்திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள சூழலில், "அறியப்பட்டவர்கள் மீது அவதூறு பரப்பும் அநாகரிகம் நாடெங்கும் இப்போது நாகரிகமாகி வருகிறது. அண்மைக்காலமாக நான் தொடர்ச்சியாக அவமானப்படுத்தப்பட்டு வருகிறேன்; அவற்றுள் இதுவும் ஒன்று. உண்மைக்குப் புறம்பான எதையும் நான் பொருட்படுத்துவதில்லை; உண்மையைக் காலம் சொல்லும்" என தன் மீதான பாலியல் புகாருக்கு ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ளார் பாடலாசிரியர் வைரமுத்து.

வைரமுத்துவின் மேற்கண்ட ட்வீட்டை சுட்டிக்காட்டி அவரை பொய்யர் எனவும் சாடியுள்ளார் சின்மயி.

இதையும் தவறாமல் படிங்க
`