தவறுகளை கண்டும் காணாமல் செல்ல வேண்டுமா? நக்கீரன் கோபால் ஆவேசம்.!

24shares

ஊடகத்துறை ஜனநாயகத்தின் ஓர் இன்றியமையாத அங்கம். சமூகத்தினுள் நிகழ்ந்திடும் தவறுகளை சுட்டிக்காட்டுவதும், அவைகளை வெளிக்கொணர்வதுமே ஊடகங்களின் இன்றியமையாத பணி. அப்படியான ஊடகப்பணியை மேற்கொண்டுவரும் ஊடகவியலாளர்கள், பத்திரிகையாளர்கள் மீது ஆளும் இடத்திலுள்ளோர் கோபம் கொள்வதும், அவர்கள் மீது வழக்குகள் தொடுப்பதும் வாடிக்கையான ஒன்றுதான். இத்தகைய இடையூறுகளையெல்லாம் கடந்தே இந்த தளத்தில் ஊடகங்கள் பணியாற்றிவருகின்றன.

அப்படி, மாணவிகளை தவறான வழிக்கு கொண்டு செல்ல முயன்ற அருப்புக்கோட்டை கல்லூரி நிர்மலாதேவி விவகாரத்தினை முதன் முதலாக வெளிக்கொணர்ந்த நக்கீரன் இதழ், தொடர்ச்சியாக அந்த விவகாரத்தில் ஆளுநர் மாளிகையும் தொடர்புபட்டிருக்கிறது என அறுதியிட்டுக்கூறுகிறது.

இந்த விவகாரத்தில் நிர்மலாதேவி, கல்லூரி மாணவிகளிடத்தில் பேசுவதை கேட்ட எந்த ஒருவராலும் புரிந்துகொள்ள முடியும் ஆளுநர் மாளிகைக்கு தொடர்பு உள்ளதா? இல்லையாவென.

குற்றம் சாட்டப்பட்ட ஒருவரே ( ஆளுநர்) தன் மீதான குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க ஓர் விசாரணை கமிஷனை நியமித்து ஜனநாயகத்தினை கேலிக்கூத்தாக்கிக்கொண்டிருப்பார். சிறையிலுள்ள நிர்மலாதேவியும் வாய் திறக்க முயன்றால் அவரை தீர்த்துக்கட்டவும் சதி நடக்கும் இவற்றையெல்லாம் புலனாய்வு செய்து செய்தியாக வெளியிட்டால் பத்திரிகைகளை ஒடுக்க நினைப்பதா? என நேற்றைய தினம் பொதுமக்கள் கேள்வியெழுப்ப தொடங்கினர்.

காரணம், நக்கீரன் கோபாலின் கைது. ஆனால், அவரை குறிப்பிட்ட சட்டப்பிரிவின் கீழ் நீதிமன்ற காவலில் வைக்க முடியாது என அதிரடி தீர்ப்பு வழங்கி விடுவித்தது நீதிமன்றம்.

விடுதலையான பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கோபால், " சமூகத்தில் நடக்கும் அதுவும் கல்லூரி மாணவிகளின் வாழ்வினை சிதைக்க நடக்கும் சதியை ஆதாரங்களுடன் வெளியிட்டால் எங்களை ஒடுக்க நினைப்பதா? தன் மீது குற்றம் இல்லாவிடில் எதற்காக பதற்றம் அடைகிறது ஆளுநர் தரப்பு. இந்த கொடுமைகளையெல்லாம் கண்டும் காணாமல் செல்ல எங்களால் முடியாது. எங்களின் பணி தொடருமென" தீர்க்கமாக தெரிவித்துள்ளார் நக்கீரன் கோபால்.

இதையும் தவறாமல் படிங்க
`