வைரமுத்து மீதான பாடகியின் பாலியல் புகார் ; சுப.வீரபாண்டியன் சர்ச்சை கருத்து .!

91shares
Image

பெண்கள் தங்களது அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் எதிர்கொள்ளும் பாலியல் ரீதியிலான தொந்தரவுகளை வெளிப்படுத்துவதற்காக, அவை குறித்து விவாதிப்பதற்காக இணையத்தில் #mee too என்ற பரப்புரை மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இந்த பரப்புரையில் உலகளாவிய புகழ் பெற்ற பெண்களும் கூட தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொந்தரவுகள் வெளிப்படுத்திவருகின்றனர். அவை கேட்போர்களை அதிர்ச்சியடைய செய்பவையாகவும் உள்ளது.

அந்த வகையில் தமிழ்த்திரைப்பட படலாசிரியரும்,கவிஞருமான வைரமுத்து தனக்கு பாலியல் ரீதியிலான தொந்தரவுகளை அளித்ததாகவும், தன்னை போன்றது இன்னும் பல பெண்கள் அவரால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பிரபல பாடகி சின்மயி புகார் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தமிழ்த் திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள சூழலில், திராவிட இயக்க தமிழர் பேரவையின் சுப.வீரபாண்டியன் தனது முகநூல் பக்கத்தில் " இன்ஸ்பெக்டர் ஒரு புகார் கொடுக்க வந்திருக்கேன் . தப்பு நடந்து 14 வருஷம் ஆயிடுச்சா" என வைரமுத்து மீது பாலியல் புகார் தெரிவித்துள்ள பாடகி சின்மயியை விமர்சிக்கும் வகையில் கருத்து தெரிவித்துள்ளார்.

இதற்கு சுப. வீரபாண்டியனுக்கு கடுமையான எதிர்ப்புகள் கிளம்பிவருகின்றன. வருடங்கள் எத்தனை ஆனால் என்ன? தனக்கு நேர்ந்த பாலியல் சீண்டலை வெளியிட்டுள்ளார் சின்மயி. அதனில் உண்மை உள்ளதா என்றுதான் ஆராய வேண்டுமே தவிர, இத்தனை ஆண்டுகள் கழித்து வெளியில் கூறுவது ஏன் என விமர்சிப்பட்டது தான் பெண்ணியம் காப்பதாக கூறிக்கொள்ளும் திராவிடவாதிகளின் பண்பாடா என சுப.வீரபாண்டியனை கடுமையாக விமர்சித்துவருகின்றனர் சமூக ஆர்வலர்கள்.

இதையும் தவறாமல் படிங்க
`