எம்.ஜி.ஆர் சிகிச்சை ஆவணங்களை கேட்கும் விசாரணை கமிஷன் - சிக்கலில் அப்போலோ.!

51shares
Image

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி உடல்நலக்குறைவினால் மரணித்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில், ஜெயா உடல்நலக்குறைவினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறக்கும் வரையிலான சுமார் 75 நாட்களும் வேறு எவரையும் அவரை பார்க்க அனுமதித்திடாத சசிகலா குடும்பத்தின் பெயரில் ஜெ மரணத்தில் சந்தேகம் உள்ளதாக பலர் தெரிவித்தனர்.

மேற்கண்ட புகாரை கருத்தில் கொண்டு ஜெயா மரணம் கொண்டு விசாரித்து உண்மைகளை வெளிக்கொணர ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகத்தினை கொண்டு விசாரணைக்கமிஷன் அமைக்கப்பட்டது.

விசாரணை கமிஷனில் ஜெயலலிதா தொடர்புடையவர்களும், ஜெ சிகிச்சை மேற்கொண்ட மருத்துவமனையை சார்ந்தவர்களும் ஆஜராகி தங்களுக்கு தெரிந்த தகவல்களை பகிர்ந்துவருகின்றனர். அதே சமயம், சிகிச்சைக்காக அவரை வெளிநாட்டிற்கு கொண்டு செல்லாதது ஏன் என்ற கேள்வியும் தொடர்ச்சியாக எழுப்பப்பட்டு வந்தது.

இந்நிலையில், எம்ஜிஆரின் சிகிச்சை ஆவணங்களை வழங்க அப்போலோவுக்கு ஆறுமுகசாமி ஆணையம் உத்தவிட்டுள்ளது. கடந்த 1984-ல் அப்போலோவில் இருந்து சிகிச்சைக்காக வெளிநாட்டிற்கு எம்ஜிஆர் அழைத்துச் செல்லப்பட்டிருந்தார். எம்ஜிஆரை மட்டும் எந்த அடிப்படையில் சிகிச்சைக்காக வெளிநாட்டிற்கு கொண்டு சென்றீர்கள்? என்ற ரீதியில் விசாரணையை தொடங்கவே விசாரணை கமிஷன் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

விசாரணை கமிஷனின் இந்த முடிவால் அதிர்ந்து கிடக்கிறது அப்போலோ.

இதையும் தவறாமல் படிங்க
`