வைரமுத்து மீதான புகார் ; சின்மயிக்கு ஆதரவாக களமிறங்கிய தமிழிசை.!

54shares
Image

பாடலாசிரியர் வைரமுத்து மீதான பாடகி சின்மயி-யின் பாலியல் புகார் தற்போது தமிழக சினிமா துறையை மட்டுமின்றி அரசியல் களத்தையும் கலக்கிவருகிறது. ஆம், குறிப்பிட்ட சம்பவம் நடைபெற்று இத்தனை ஆண்டுகள் கழித்து அதனை வெளியே தெரிவிப்பது ஏன் என திராவிட இயக்க தமிழர் பேரவையின் சுப. வீரபாண்டியன் சின்மயியை விமர்சிக்கும் வகையில் நேற்றைய தினம் கருத்து தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ளார் பாஜக தமிழக தலைவர் தமிழிசை. இது தொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள அவர், " பாடகி சின்மயின் கருத்து கவனிக்கப்படவேண்டியது. நிச்சயம் விசாரிக்கப்படவேண்டியது. அரசியல்வாதிகள் அனைவரையும் விமர்சனம் செய்யும் திரைத்துறையினர் நடிகர்கள் தங்கள் துறையில் நடந்துள்ள தவறுகளை கண்டு கொள்ளாதது ஏன்?" என கேள்வியெழுப்பியுள்ளார்.

முன்னதாக, இத்தகைய அவதூறுகளை தாம் கடந்து செல்ல விரும்புவதாக வைரமுத்து விளக்கமளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க
`