கார்த்தி சிதம்பரத்தின் ரூ.54 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம் - அமலாக்கத்துறை அதிரடி.!

24shares
Image

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான பா.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்திற்கு சொந்தமான 54 கோடி மதிப்புள்ள சொத்துக்குகளை அதிரடியாக முடங்கியுள்ளது அமலாக்கத்துறை.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது கடந்த 2007 ஆம் ஆண்டு, மத்திய நிதி அமைச்சராக ப.சிதம்பரம் பதவி வகித்தபோது, பீட்டர் முகர்ஜி அவரது மனைவி இந்திராணி ஆகியோருக்கு சொந்தமான ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்திற்கு விதிமுறைகளுக்கு மாறாக ரூ.305 கோடி அன்னிய முதலீடுக்கு வெளிநாட்டு முதலீட்டு மேம்பாட்டு வாரியம் மூலம் அனுமதி வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த மோசடியை மறைக்க கார்த்தி சிதம்பரம் தனது நிறுவனங்கள் மூலம் உதவியதாக குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளார். இந்த விவகாரத்தில் சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை ஆகியவை தனித்தனியே வழக்குப் பதிவு செய்தன.

அதன் தொடர்ச்சியாக கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி இந்த வழக்கில் கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட்டார். பின்னர் 24 நாள்களுக்குப் பிறகு அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். மேலும், கார்த்தி சிதம்பரத்தின் வங்கி கணக்குகள் சில முடக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், அடுத்தகட்டமாக கார்த்தி சிதம்பரத்திற்கு சொந்தமான சுமார் ரூ.54 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. இதில் ப.சிதம்பரத்திற்கு சொந்தமான டெல்லி வீடும் ஒன்று என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்திராணி முகர்ஜி சொத்துக்களும் முடக்கப்பட்டுள்ளன.

இதையும் தவறாமல் படிங்க