இலங்கை பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்த இந்திய தமிழ் சினிமா பிரபலம்?

352shares
Image

பாடகி சின்மயி பல்வேறு பிரபலங்களின் பாலியல் அத்துமீறல்கள் குறித்து வெளியிட்டு வருகிறார். கவிஞர் வைரமுத்து குறித்தும் இவர் பரபரப்பு தகவல்களை வெளியிட்டுள்ளார். அதை வைரமுத்து மறுத்துள்ளார்.

இந்நிலையில் தற்போது "டான்ஸ் மாஸ்டர் கல்யாண் தன்னை கண்ட இடத்தில் தொட்டதுடன் படுக்கைக்கு அழைத்ததாக இலங்கையை சேர்ந்த பெண் ஒருவர் தெரிவித்துள்ளார். என சின்மயி தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

இலங்கையை சேர்ந்த பெண் ஒருவர் தனக்கு நடந்த கொடுமை குறித்த விபரங்களை பெயரை குறிப்பிடாமல் அனுப்பி வைத்துள்ளார்.

டான்ஸ் மாஸ்டர் கல்யாண் மீது அந்த பெண் பாலியல் புகார் தெரிவித்துள்ளார். அந்த ட்வீட்டில் அவர் கூறியிருப்பதாவது,

நான் இலங்கையில் உள்ள மட்டக்களப்பில் பிறந்தவள். தற்போது கொழும்பில் வசிக்கிறேன். நீங்கள் செய்வது குறித்து என் கணவர் மூலம் அறிந்து உங்களிடம் பேசுவதற்காகவே இந்த கணக்கை துவங்கினேன். இதுவரை நான் வாய் திறக்காமல் இருந்தேன். தயவு செய்து என் பெயரை வெளியிடாதீர்கள். வெளியிட்டால் என்னை சுற்றியுள்ளவர்களுக்கு அது நான் தான் என்று தெரிந்துவிடும்.

தமிழ் சினிமா எனக்கு டான்ஸ் என்றால் மிகவும் பிடிக்கும். தமிழ் சினிமாவில் டான்ஸ் மாஸ்டர் ஆகும் ஆசையில் கடந்த 2010 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு வந்தேன். சென்னையில் தங்கியிருந்தேன். என் சல்சா நடன குரு மூலம் எங்கள் டான்ஸ் வகுப்பில் கல்யாண் மாஸ்டரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர் என்னை தன்னுடன் சேர்ந்து சல்சா ஆடச் சொன்னார். நானும் சந்தோஷமாக ஆடினேன்.

அவர் என்னை வேண்டும் என்றே கண்ட இடத்தில் தொட்டதால் அசெளகரியமாக இருந்தது. உடனே எனக்கு தலைவலி என்று கூறி ஆடுவதை நிறுத்திவிட்டேன். அவர் என் தொலைபேசி எண்ணை வாங்கி அன்று இரவே போன் செய்தார். அவருடைய உதவியாளராக வேலை செய்ய அவருடன் படுக்கையை பகிர வேண்டும் என்று கூறினார். நான் அதிர்ந்து போனேன். எனது கனவுகள் சிதறிப் போனதை உணர்ந்தேன். போன் காலை கட் செய்துவிட்டேன். திறமையை மட்டும் வைத்து சினிமாவில் நுழைய முடியாது என்பதை புரிந்து கொண்டு என் நாட்டிற்கு திரும்பிவிட்டேன்.

இதுவரை நான் இது குறித்து பேசியது இல்லை. பேசினால் என் சுதந்திரம் போய்விடும். அனைத்து வலியையும் நான் எனக்குள் வைத்ததால் என்னால் தொடர்ந்து படிக்க முடியாமல் போனது. தற்போது நான் இல்லத்தரசியாக உள்ளேன். வாய்ப்பு கிடைக்க படுக்கைக்கு செல்ல வேண்டும் என்பதால் எதிர்காலத்தை தொலைத்துவிட்டேன். உங்களை போன்றவர்களால் என் போன்ற பெண்களுக்கு சினிமா உலகம் நல்லபடியாக இருக்கும் என்பதில் மிக்க மகிழ்ச்சி. நன்றி என்று தெரிவித்துள்ளார் அந்த இலங்கை பெண்.

அந்த இலங்கை பெண் டிவிட்டரில் தனக்கு அவ்வாறு தெரிவித்தார் என தனது டிவிட்டரில் பகிர்ந்துள்ளாரே தவிர இந்த செய்தி தொடர்பான உண்மைத்தன்மை தெளிவாக தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க