சீமானை மதிப்புற்குரிய ஒருவராகவே நடத்தினார்கள் புலிகள் - எல்லாளன் இயக்குனர் ஜி.டி நந்து.!

77shares
Image

தமது தார்மீக உரிமையான தனி ஈழம் கோரி நெடுங்காலமாக பல வடிவிலான போராட்டங்களை முன்னெடுத்தனர் ஈழத்தமிழர்கள். அவர்களின் போராட்டங்களுக்கு தமிழகம் எப்போதும் உறுதுணையாகவே இருந்துவந்திருக்கிறது என்றால் அதில் மிகையேதுமில்லை. அப்படி, ஈழத்தின் மீதும் - ஈழத்தமிழர்கள் மீது பற்று கொண்ட தமிழக தலைவர்கள் பலர் விடுதலைப் புலிகளின் போராட்ட காலத்தில் நேரடியாகவே அங்கு சென்று வந்திருக்கின்றனர்.

அப்படியானவர்களின் வரிசையில், பழ. நெடுமாறன், வைகோ, கொளத்தூர் மணி, கோவை ராமகிருஷ்ணன், தொல். திருமாவளவன் உள்ளிட்டவர்கள் அடங்குவர். அப்படி ஈழம் சென்று வந்ததன் பின்னர் (2009க்கு பின்) ஓர் அரசியல் கட்சியின் தலைமையாக உருவானவர் நாம் தமிழர் கட்சியின் சீமான்.

அவர் அவ்வப்போது தமது ஈழ பயணம் குறித்த அனுபவங்களை பொதுக்கூட்டங்கள் மற்றும் நேர்காணல்களில் வெளிப்படுத்துவதும் அதற்கு கடுமையான விமர்சனங்கள் கிளம்புவதும் வாடிக்கையானது. அதற்கு பதிலளித்த சீமான் அங்கு நடந்தவை எனக்கும் என்னோடு இருந்தவர்களுக்கு மட்டுமே என தெரிவித்துவந்தார்.

இந்த நிலையில், புலிகளின் தயாரிப்பில் உருவான எல்லாளன் என்ற திரைப்படத்தினை ஈழம் சென்று இயக்க திரைப்பட இயக்குனர் ஜி.டி நந்து சீமானின் ஈழப்பயணம் குறித்து பேசியுள்ளார். நாங்கள் உருவாக்கிய எல்லாளன் திரைப்படத்தினை துவக்கி வைப்பதற்காகவே அவர் அங்கு வந்திருந்தார். அவரை நான் அறிந்த வரையில் புலிகள் மதிப்பிற்குரிய ஒருவராகவே நடத்தினார்கள். அவர்களின் இயக்க சீருடையை அணித்துக்கொள்ளவும் சீமான் விருப்ப பட்டார். ஆனால், அதற்கு அவர் அனுமதிக்கப்படவில்லை.

சிலர் கூறுவதைப்போல அண்ணன் பிரபாகரனுடன் சீமான் உள்ள புகைப்படம் போலியானதல்ல, அது உண்மை தான் என தெரிவித்துள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க