திருச்சியில் அனைவரையும் பதறவைத்த விமான விபத்து! பயணிகளின் நிலை?

29shares
Image

திருச்சியில் இன்று அதிகாலை ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது. 130 பயணிகளுடன் பறந்த விமானம் கட்டுப்பாட்டு கோபுரத்தில் உரசிச் சென்ற காரணத்தினால் மிகுந்த பரபரப்பு உண்டானது.

திருச்சிராப்பள்ளி விமான நிலையத்தில் இருந்து அரபு நாடுகளில் ஒன்றான துபாய்க்கு ஏர் இந்தியா விமானம் இயக்கப்படுகிறது. மும்பை வழியாக இந்த விமானம் செல்கிறது. இன்று (அக்டோபர் 12) அதிகாலை 1.20 மணிக்கு இந்த விமானம் திருச்சி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டது. அப்போது தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம் போதிய உயரத்தில் பறக்கவில்லை.

திடீரென விமானத்தின் சக்கரங்கள், விமான நிலையத்தின் சுற்றுச்சுவரின் மீது உரசின. தொடர்ந்து அருகில் இருந்த விமான கட்டுப்பாட்டு கோபுரத்தின் மீதும் உரசியபடி பறந்தது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. எனினும் விமானம் நிற்காமல் பறந்து சென்றுவிட்டது. நேரடியாக அந்த விமானம் துபாய்க்கு பறந்துவிட்டதாக முதலில் தகவல்கள் வெளியாகின. ஆனால் பின்னர் விமானம் மும்பை விமான நிலையத்தில் இறக்கப்பட்டது.

திருச்சியில் விமானம் விபத்துக்குள்ளான பகுதியை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பார்வையிட்டார். பின்னர் நிருபர்களிடம் பேசிய அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், ‘விமானத்தில் இருந்த 130 பயணிகளும் பத்திரமாக இருப்பதாக’ குறிப்பிட்டார்.

திருச்சியில் நடைபெற்ற இந்த விபத்தின் காரணமாக அப்பகுதியே மிகுந்த பரபரப்புக்கு உள்ளானது குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க