பாலியல் புகார்களுக்கு உள்ளானோர் விளக்கமளிக்க வேண்டும் - கமல் பேட்டி.!

63shares
Image

பெண்கள் தங்களது அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் எதிர்கொள்ளும் பாலியல் ரீதியிலான தொந்தரவுகளை வெளிப்படுத்துவதற்காக, அவை குறித்து விவாதிப்பதற்காக இணையத்தில் #mee too என்ற பரப்புரை மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இந்த பரப்புரையில் உலகளாவிய புகழ் பெற்ற பெண்களும் கூட தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொந்தரவுகள் வெளிப்படுத்திவருகின்றனர். அவை கேட்போர்களை அதிர்ச்சியடைய செய்பவையாகவும் உள்ளது.

அந்த வகையில் தமிழ்த்திரைப்பட படலாசிரியரும்,கவிஞருமான வைரமுத்து தனக்கு பாலியல் ரீதியிலான தொந்தரவுகளை அளித்ததாகவும், தன்னை போன்றது இன்னும் பல பெண்கள் அவரால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பிரபல பாடகி சின்மயி புகார் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தமிழ்த் திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள சூழலில், மேற்கண்ட விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல், " இதுபோன்ற பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர்கள் தம் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக விளக்கமளிக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

மேலும், ஆளுநர் தம் மீதான குற்றச்சாட்டு பொய்யானது என நிரூபித்திடாமல் அப்பதவியில் தொடரக்கூடாது என தெரிவித்துள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க