மனைவியுடன் தகராறு ; தற்கொலை செய்துகொண்ட சங்கர் ஐஏஎஸ் அகாடமி நிறுவனர்!

61shares
Image

சென்னை, மயிலாப்பூரில் வசித்து வந்தவர் சங்கர். இவரது சொந்த ஊர் திருச்செங்கோடு அருகே உள்ள நல்லாங்கவுண்டம்பாளையம். இவர் சென்னை அண்ணா நகரில் சங்கர் ஐஏஎஸ் அகாடமி நடத்தி வந்தார். இந்த மையத்தில் சுமார் 1500 பேர் பயிற்சி பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று இரவு, சங்கர் தன் வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டார். மனைவியுடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக அவர் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. வீட்டிலிருந்த மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட சங்கரை அவரது குடும்பத்தினர் மீட்டு அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் சங்கரின் உடல் பிரேத பரிசோதனைக்காக ராஜூவ் காந்தி அரசு பொதுமருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இந்த தற்கொலை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முன்னதாக, அதிக அளவிலான மாணவர்களுக்கு ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட சிவில் சர்வீஸ் பணிகளுக்கான பயிற்சியினை தனது சங்கர் ஐஏஎஸ் பயிற்சி மையத்தின் மூலம் வழங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க