வைரமுத்து மீதான என் குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மை - சின்மயி திட்டவட்டம்!

51shares
Image

#mee too என்ற பரப்புரையின் மூலம் உலகம் ழுழுவதுமுள்ள பெண்கள் தாங்கள் பொதுவெளியில், அலுவலகங்களில், இன்ன பிற இடங்களில் எதிர்கொண்ட பாலியல் தொந்தரவுகளை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுவருகின்றனர்.

பாலியல் ரீதியிலான தொந்தரவுகளை, சீண்டல்களை, அத்துமீறல்களை வெளியிடாமல் அமைதி காப்பதன் வாயிலாகவே அவை அதிகரிக்கின்றன. அம்மாதிரியான விடயங்கள் பொதுவெளியில் பேசப்பட வேண்டும். பெண்களுக்கெதிரான இந்த செயல்கள் குறைந்திட வேண்டுமென்பதுதான் இந்த பரப்புரையின் நோக்கம்.

இந்த பரப்புரையில் புகழ்பெற்ற பெண்களும் கூட தங்களுக்கு நேர்ந்த பாலியல் சீண்டல்கள்களை வெளிப்படுத்திவருகின்றனர். அந்த வகையில், திரைப்பட பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து தனக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக சில தினங்களுக்கு முன்னதாக புகார் தெரிவித்திருந்தார்.

இந்த விவகாரம் தமிழ் திரையுலகத்தினை கலக்கிய நிலையில், வைரமுத்து தான் தொடர்ச்சியாக அவமானப்படுத்தப்படுவதாக கருத்து தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், வைரமுத்து விவகாரம் குறித்து முகநூல் நேரலையில் பேசிய சின்மயி, " வைரமுத்து தவறாக நடந்துகொண்டார் என கூறுவதற்கு சக பாடகிகள் பலருக்கு தயக்கம் உள்ளது. ஆனால், அது தான் உண்மை. அவர் மீதான என் குற்றச்சாட்டுகள் அத்தனையும் உண்மை. அதற்காக அவர் தான் வெட்கப்பட வேண்டுமேயொழிய நான் அல்ல" என தெரிவித்துள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க