சிபிஐ விசாரணைக்கு ஆளாகியுள்ள எடப்பாடி முதல்வராக நீடிப்பதா? ஸ்டாலின் காட்டம்.!

16shares
Image

நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்தங்களை ஒப்பந்ததாரர்களுக்கு ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடைபெற்றிருப்பதாக முதல்வா் பழனிசாமி மீது தி.மு.க. அமைப்புச் செயலாளா் ஆா்.எஸ்.பாரதி தொடர்ந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முதல்வா் பழனிசாமி நெடுஞ்சாலைத்துறையை நிா்வகித்து வருகிறாா். இந்நிலையில் நெடுஞ்சாலை ஒப்பந்தங்களை சட்டத்திற்கு புறம்பாக தனது உறவினா்கள், நண்பா்களுக்கு ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் இதில் 4 ஆயிரத்து 800 கோடி ரூபாய் அளவில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாகவும் தி.மு.க. அமைப்புச் செயலாளா் ஆா்.எஸ்.பாரதி லஞ்ச ஒழிப்புத்துறையில் வழக்கு தொடா்ந்திருந்தாா்.

ஆனால், முதல்வரின் நேரடி கண்காணிப்பில் செயல்படும் லஞ்சஒழிப்புத்துறை தனது புகாா் குறித்து முறையாக விசாரணை நடத்தவில்லை என்று ஆா்.எஸ்.பாரதி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தாா். மனுவை விசாரித்த நீதிபதி ஜெகதீஷ் சந்திரா இந்த வழக்கை சி.பி.ஐ. அதிகாாிகள் விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டாா்.

முதல்வர் மீதான ஊழல் புகார் வழக்கினை சிபிஐ விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்துள்ள திமுக தலைவர் ஸ்டாலின், " முதல்வர் பழனிசாமி மீதான ஊழல் வழக்கினை சென்னை உயர்நீதிமன்றம் சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள நிலையில், முதலமைச்சர் பதவியிலிருந்து எடப்பாடி திரு பழனிசாமி உடனடியாக விலகி சுதந்திரமான ஊழல் விசாரணைக்கு வழி விட வேண்டும் என்றும், ஆதாரங்கள் அழிப்பிற்கு இடமளித்து விடாமல் காலதாமதமின்றி சி.பி.ஐ. இந்த டெண்டர் ஊழல் வழக்கின் ஆவணங்களைப் பெற்று விசாரணையை துவங்கிட வேண்டும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் தவறாமல் படிங்க