தமிழகத்தில் அதிகரிக்கும் வட இந்தியர்களின் எண்ணிக்கை ; காத்திருக்கிறது ஆபத்து.!

84shares
Image

தமிழகத்தில் வட இந்தியர்களின் எண்ணிக்கையானது அதிகரித்து வருவதாகவும், இதே நிலை நீடிக்குமேயானல் தமிழர்கள் தங்களின் அரசியல் அதிகாரத்தை விரைவில் இழக்க நேரிடுமென தெரிவித்துள்ளார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.

சென்னை, கொரட்டூர் பகுதியில் அப்பகுதி மக்களின் குடியிருப்பு பகுதிகள் அகற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அம்பத்தூரில் கண்டன கூட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சீமான், "கேரளாவில் 15 ஆண்டுகள் வசித்தால்தான் குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை தரப்படுவதாகவும், ஆனால் தமிழகத்தில் 2 மாதங்கள் வசித்தாலே அனைத்து சலுகைகளும் கிடைக்கும் நிலை உள்ளதாகவும்" குற்றம் சாட்டினார்.

மேலும், அனைத்து துறைகளிலும் பாலியல் குற்றச்சாட்டுகள் உள்ளதாகவும், பெரிய விசயங்களை திசை திருப்பவே பாலியல் குற்றச்சாட்டுகள் வெளியிடப்படுவதாகவும் தெரிவித்துள்ளார் சீமான்.

இதையும் தவறாமல் படிங்க