கோவிலுக்குள் செல்ல வேண்டாம் ; பெண்ணின் காலில் விழுந்து பக்தர்கள் வேண்டுகோள்.!

111shares
Image

கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் 10 முதல் 50 வயதுடைய பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை என்ற வழக்கத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் கடந்த மாதம் தீா்ப்பு வழங்கப்பட்டது. அப்போது சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் அனுமதிக்கப்பட வேண்டும். ஆணும், பெண்ணும் சமம் என்று தீா்ப்பு வழங்கப்பட்டது.

உச்ச நீதிமன்றத்தின் மேற்கண்ட தீர்ப்பு வரவேற்பினையும், எதிர்ப்பினையும் பெற்ற நிலையில் இன்று மாலை 5 மணியளவில் சபரிமலை கோவில் நடைதிறக்கப்பட உள்ளது. தீர்ப்பு வெளியான நாள் முதலே 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்களை கோவிலுக்குள் அனுமதிக்க கடும் எதிர்ப்பு கிளம்பியது. பலகட்ட போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், இன்று ஆந்திராவை சேர்ந்த 40 வயது மதிக்கதக்க பெண்ணொருவர் சந்நிதானத்திற்குள்ளாக செல்ல முயன்றார். அவருக்கு காவல்துறையும் போதிய பாதுகாப்பு அளித்தது. அப்போது, அங்கு வந்த பக்தர்கள் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாய் தொடரும் எங்களின் நம்பிக்கையை சிதைத்துவிட வேண்டாம் என அப்பெண்ணின் காலில் விழுந்து வேண்டுகோள் வைத்ததனை தொடர்ந்து கோவிலுக்குள் செல்லாமல் அவர் திரும்பி சென்றார்.

இதையும் தவறாமல் படிங்க