பாலியல் குற்றச்சாட்டு ; மத்திய இணையமைச்சர் எம்.ஜே அக்பர் ராஜினாமா.!

19shares
Image

#metoo என்ற உலகளாவிய பரப்புரையின் மூலம் பெண்கள் தாங்கள் வேலை பார்க்கும் இடங்கள் மற்றும் பொதுவெளிகளில் எதிர்கொண்ட பாலியல் தொந்தரவுகள் மற்றும் சீண்டல்களை சமூகவலைத்தளங்களின் மூலம் வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த பரப்புரையை பயன்படுத்தி பெருமளவில் அறியப்பட்ட பெண்கள் சிலரும் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொந்தரவுகளை வெளிப்படுத்தியுள்ளனர்.

அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்னதாக மத்திய வெளிவிவகாரத்துறை இணையமைச்சர் எம்.ஜே அக்பர் மீதும் மின்ட் லாங்க் ஆசிரியர் பிரியா ரமணி அமெரிக்க பத்திரிகையாளர் மஜ்லி டி பு காம்ப், போர்ஸ் பத்திரிக்கையின் முன்னாள் ஆசிரியர் கஜாலா வஹாப் ஆகியோர் பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.

மத்திய இணையமைச்சருக்கு எழுந்த பாலியல் குற்றச்சாட்டினால் அரசியல் தளத்தில் கொந்தளிப்பான சூழல் ஏற்பட்டதுடன், எம்.ஜே அக்பர் பதவி விலகிட வேண்டுமெனவும் வலியுறுத்தின எதிர்க்கட்சிகள். ஆனால், இது குறித்து வெளிப்படையாக எதுவும் பேசாமல் அமைதி காத்து வந்தது மத்திய அரசு.

இந்நிலையில், பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான மத்திய வெளியுறவு இணையமைச்சர் எம்.ஜே.அக்பர் பதவி விலகியுள்ளார். தம் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டினை எதிர்கொண்டு நிரபராதி என நிரூபிப்பேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க