சர்கார் விவகாரம் ; ஏ.ஆர் முருகதாஸ் மீது தேசத்துரோக பிரிவின் கீழ் புகார்.!

52shares

நடிகர் விஜய் நடிப்பில், ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக வெளியான சர்கார் திரைப்படத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் புகழினை குலைக்கும் வகையிலான காட்சிகளும், அரசினது மக்கள் நல திட்டங்கள் குறித்து அவதூறு பரப்பும் வகையிலான சித்தரிப்புகளும் இடம்பெற்றுள்ளதாக கூறி படக்குழுவுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்திருந்தார் செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு.

இந்த நிலையில், மாநில அரசுக்கு எதிராக வன்முறை செய்ய தூண்டும் வகையில் திரைப்படம் எடுத்துள்ள ஏ.ஆர் முருகதாஸ் மீது தேச துரோக சட்டப்பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் தேவராஜன் என்பவர் புகார் அளித்துள்ளார்.

முன்னதாக, தீவிரவாதிகளைப் போல அரசுக்கு எதிரான கருத்துக்களை தங்களது திரைப்படத்தில் இடம்பெறச்செய்துள்ள படக்குழுவினருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென சட்டத்துறை அமைச்சர் சி.வி சண்முகம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க