தமிழகம் மற்றும் புதுவையில் இடியுடன் கூடிய கனமழை - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!

12shares

குமரிக்கடல் பகுதியில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சியின் காரணத்தினால் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் பல இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், " குமரிக்கடல் பகுதியில் தற்போது நிலவி வரும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சியால் தமிழகம், புதுச்சேரியில் பல இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக" தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யவும் வாய்ப்பு உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

மேலும், அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகும் என்றும் அதனால் மீனவர்கள் அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தல் விடுத்துள்ளது.

இதையும் தவறாமல் படிங்க